உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 25.pdf/321

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

288

மறைமலையம் - 25

ஈண்டு ஏழ்தலம் என்றவை பாதலத்தின்கண் உள்ள ஏழ் உலகங்களை; அவை யாவன: “அதல விதல சுதல நிதல தராதல, ரசாதல மகாதல மென்னப், பாதலம் ஓரேழுலகெனப் பகர்வர்” என்றார் திவாகரத்தில்.

66

உருவுதல் - நடுவே துளைத்தல்; இச்சொல் இப்பொருட் டாதல் உம்பரும் அறியா ஒருவனே இருவர்க் குணர்விறந் துலகம் ஊடுருவுஞ் செம்பெருமானே என்று அடிகள் பிறாண்டும் (வாழாப்பத்து 2) ஓதுமாற்றாற் காண்க.

-

இடந்து பிளந்து; படையிடந்த ஆறாப்புண் என்புழியும் (புறப்பொருள் வெண்பா மாலை 4 18) இப்பொருட்டாதல்

காண்க.

418)

எய்த்து - இளைத்து: “எய்த்த மெய்யேன் எய்யே னாகி" என்பதுஉங் காண்க. (பொருநராற்றுப்படை68)

'ஐய' என்னும் வடசொல் சய வெனத் திரிந்தது; அஃது இருகால் அடுக்கி உடம்பாட்டுப் பொருளை உணர்த்தியது; இப்பொருளுணர்த்தல் சேனாவரைய

(தொல்காப்பியம் சொல் 411) கண்டு கொள்க.

ருரையினுங்

வழுத்துதல், பரவுதல், துதித்தல் என்பன ஒரு பொருட்

கிளவிகள்; பிங்கல;நதை.

மலரடி இணைகள்' என்பதில் இணைகள் என்பதன் ஈற்றில் நின்ற கள் என்னும் ஈற்றைப் பிரித்து அடி என்பதனோடு கூட்டுக; “அருங்கேடன் என்பதறிக" என்பதனுட் (திருக்குறள் 210) கேடன் என்பதன் ஈற்றில் நின்ற அன் என்னும் ஈற்றை அரு என்பதனொடு கூட்டிக்கேடரியன் என உரைப்பவாகலின்.

‘வார் கடல்' என்பதில் வார்தல் நெடுமைப்பொருட்டாதல் வார்தல் போகல் ஒழுகல் மூன்றும், நேர்வு நெடுமையுஞ்செய்யும் பொருள் என்னுந் தொல்காப்பிய உரியியற் சூத்திரத்தானுணர்க.

யானை முதலா எறும்பீ றாய

ஊனமி லியோனியி னுள்வினை பிழைத்தும்

மானுடப் பிறப்பினுள் மாதா உதரத்

தீனமில் கிருமிச் செருவினிற் பிழைத்தும்,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_25.pdf/321&oldid=1589591" இலிருந்து மீள்விக்கப்பட்டது