உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 25.pdf/322

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

15

20

25

திருவாசக விரிவுரை

ஒருமதித் தான்றியின் இருமையிற் பிழைத்தும், இருமதி விளைவின் ஒருமையிற் பிழைத்தும், மும்மதி தன்னுள் அம்மதம் பிழைத்தும், ஈர்இரு திங்களிற் பேர்இருள் பிழைத்தும், அஞ்சு திங்களில் முஞ்சுதல் பிழைத்தும்,

ஆறு திங்களின் ஊறலர் பிழைத்தும் ஏழு திங்களில் தாழ்புவி பிழைத்தும், எட்டுத் திங்களிற் கட்டமும் பிழைத்தும் ஒன்பதில் வருதரு துன்பமும் பிழைத்தும் தக்க தசமதி தாயொடு தான்படுந்

துக்க சாகரத் துயரிடைப் பிழைத்தும், ஆண்டுக டோறும் அடைந்தஅக் காலை ஈண்டியும் இருத்தியும் எனைப்பல பிழைத்தும், காலை மலமொடு கடும்பகற் பசிநிசி வேலை நித்திரை யாத்திரை பிழைத்தும்

30 கருங்குழற் செவ்வாய் வெண்ணகைக் கார்மயில் ஒருங்கிய சாயல் நெருங்கிஉள் மதர்த்துக் கச்சற நிமிர்ந்து கதிர்த்து முன்பணைத் தெய்த்திடை வருந்த எழுந்து புடைபரந் தீர்க்கிடை போகா இளமுலை மாதர்தங்

35 கூர்த்த நயனக் கொள்ளையிற் பிழைத்தும் பித்த உலகர் பெருந்துறைப் பரப்பினுள் மத்தக் களிறெனும் அவாவிடைப் பிழைத்தும், கல்வி என்னும் பல்கடற் பிழைத்தும், செல்வம் என்னும் அல்லலிற் பிழைத்தும்

40 நல்குர வென்னுந் தொல்லிடம் பிழைத்தும்

புல்வரம் பாய பலதுறை பிழைத்தும்

-

289

யானை முதல் ஆ எறும்பு ஈறு ஆய மிகப் பெரிய யானை முதலாக மிகச்சிறிய எறும்பு இறுதியாகிய, ஊனம் இல்யோ

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_25.pdf/322&oldid=1589596" இலிருந்து மீள்விக்கப்பட்டது