உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 25.pdf/323

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

290

மறைமலையம் - 25 -

னியின் உள்வினை பிழைத்தும் கெடுதல் இல்லாத கருப்பை களினின்றும் உள்ளத்தின் கண்ணதாகிய நல்வினையான் தப்பியும், மானுடப் பிறப்பினுள் மாதா உதரத்து ஈனம் இல் கிருமிச் செருவினில் பிழைத்தும் - மக்களாய்ப் பிறக்கும் பிறப்பினுள்ளுந் தாயின் கருப்பையினுள்ளே குன்றுதல் இல்லாத புழுக்கள் இடும் போரின் நடுவே பட்டுமடியாது தப்பியும், ஒரு மதித்தான்றியின் இருமையிற் பிழைத்தும் முதற்றிங்களில்

-

தான்றிக்காயின் வடிவினை ஒப்பதாகி இருவகைப்பட்ட தன்மையினின்று தப்பியும், இருமதி விளைவின் ஒருமையிற் பிழைத்தும் - இரண்டாந் திங்களிற் கருத்தோற்றத்தின் ஒன்று பட்ட தன்மையினின்று தப்பியும், மும்மதி தன்னுள் அம்மதம் பிழைத்தும் மூன்றாந் திங்களிற் றோன்றும் அந்த மத நீருக்குத் தப்பியும், ஈர் இரு திங்களிற் பேர்இருள் பிழைத்தும் - நான்காந் திங்களிற் பெரிய இருளுக்குத் தப்பியும், அஞ்சு திங்களில் முஞ்சுதல் பிழைத்தும் ஐந்தாந் திங்களிற் சாதலுக்குத் தப்பியும், ஆறு திங்களில் ஊறு அலர் பிழைத்தும் - ஆறாந் திங்களில் கொலைக்குக் காரணமாகிய பழிச்சொல்லுக்குத் தப்பி யும், ஏழு திங்களில் தாழ் புவி பிழைத்தும் - ஏழாந் திங்களிற் கீழுள்ள நிலத்தின் வந்து பிறத்தலுக்குத் தப்பியும் எட்டுத் திங்களிற் கட்டமும் பிழைத்தும் எட்டாந் திங்களில் உண்டாகுந் துன்பத்திற்குத் தப்பியும், ஒன்பதில் வருதரு துன்பமும் பிழைத் தும் ஒன்பதாந் திங்களில் வரும் துன்பங்களுக்குத் தப்பியும், தக்க தசமதி தாயொடு தான்படும் துக்க சாகரத் துயர்இடைப் பிழைத்தும் - தாயின் கருப்பையை விட்டு அகலுதற்கு இசைந்த பத்தாந் திங்களில் தாயுந் தானுமாய்ப் படுந் துன்பக்கடலில் உளதாகிய துயரத்தினின்று தப்பியும், ஆண்டுகடோறும் அடைந்த அக்காலை ஈண்டியும் இருத்தியும் எனைப்பல பிழைத்தும் பருவங்கடோறும் வளர்ந்து மனிதப்பருவம் எய்திய அப்பொழுது பொருளைத் தொகுத்தும் தொகுத்த பொருளைப் புதைத்து வைத்தும் இவ்வாறு எவ்வளவோ எவ்வளவோ பலவாகிய

-

-

துன்பங்களுக்குத் தப்பியும்,

காலை மலமொடு கடும்பகற் பசி நிசிவேலை நித்திரை யாத்திரை பிழைத்தும் - காலைப் பொழுதில் மலத்தானும் உச்சிப் பகற் பொழுதிற் பசியானும் இராப்பொழுதில் துயிலானும் இவையொழிந்த காலங்களில் ஊர்ப்பயணம் போதலானும்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_25.pdf/323&oldid=1589601" இலிருந்து மீள்விக்கப்பட்டது