உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 25.pdf/324

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருவாசக விரிவுரை

-

-

291

கரிய

நேருந் துன்பங்களுக்குத் தப்பியும், கருங் குழல் கூந்தலினையும், செவ்வாய் -சிவந்த வாயி னையும், வெண் நகை - வெள்ளிய மூரலினையும், கார் மயில் ஒருங்கிய சாயல் கார் காலத்து ஆண் மயில் போல் ஒரு வழிப் பட்ட மென்மை யினையும், நெருங்கி உள் மதர்த்துக் கச்சு அற நிமிர்ந்து கதிர்த்து முன் பணைத்து எய்த்து இடை வருந்த எழுந்து புடை பரந்து ஈர்க்கு இடைபோகா ளமுலை ல மிகப் பெருத்தலின் ன்றோடொன்று நெருங்கி உள்ளே களிப்புக் கொண்டு பட்டினை அறும்படி மிகைத்து ஒளி வீசி எதிரே பருத்து நடுவானது இளைப்புற்று வருந்தாநிற்க எழுச்சி பெற்றுப் பக்கங்களிற் படர்ந்து ஈர்க்கும் நடுவே நுழையாத இளமை பொருந்திய கொங்கைகளையும் உடைய, மாதர்தம் கூர்த்த நயனக் கொள்ளையிற் பிழைத்தும் மகளிரினுடைய மிகுதியான கண்களின் சூறைக்குத் தப்பியும், பித்த வலகர் பெருந்துறைப் பரப்பினுள் மத்தக்களிறு எனும் அவா இடைப் பிழைத்தும் - மருள் கொண்ட உலகத்தவரின் பெரிய நீர்த்துறையாகிய பரப்பினுள்ளே கிடந்து கலக்கும் மதச் செருக்குடைய ஆண் யானை யென்னும் வோவினிடத்து நின்று தப்பியும், கல்வி என்னும் பல் கடற் பிழைத்தும் - கல்வி என்றுரைக்கப்படும் பலவாகிய கடல்களினின்று தப்பியும், செல்வம் என்னும் அல்லலிற் பிழைத்தும் செல்வமென் றுரைக்கப்படும் துன்பத்தி னின்று தப்பியும், நல்குரவு என்னும் தொல்விடம் பிழைத்தும் - வறுமை என்று கூறப்படும் பழைய நஞ்சுக்குத் தப்பியும், புல்வரம்பு ஆய பல துறை விழைத்தும் ய - புல்லை எல்லை யாகவுடைய பல பிறவித் துறைகளுக்குத் தப்பியும் என்றவாறு.

-

இயங்கும் உயிர்களுள் மிகப் பெரியது யானையும் மிகச் சிறியது கட்புலனுக்குத் தோன்றும் எறும்புமாகலின் ‘யானை முதலா எறும் பீறாய' என்று அருளிச்செய்தார். எறும்பினுஞ் சிறிய வுயிர்கள் உளவாயினும் அவை கருவிகளி னுதவியின்றிக் கட்புலனாகாமையின் அவற்றைக் கூறாராயினார். ஆக என்பது ஆ என ஈறு கெட்டது.

இப்பிறவிகள் அழிந்துபட்டு இலவாய் ஒழியாமல் தொன்று தொட்டுத் தொடர்பாய் வருதலின் ‘ஊனமில் யோனி' என்றார். ஊனம் கேடு எனப் பொருள் பயத்தலைப் பிங்கலந் தையுட் காண்க.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_25.pdf/324&oldid=1589606" இலிருந்து மீள்விக்கப்பட்டது