உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 25.pdf/325

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

292

❖ - 25❖ மறைமலையம் - 25

‘யோநி’ கருப்பை எனப் பொருள் படுவதொரு வடசொல். நல்வினை தீவினை யென்பன ஒருவன் தன் உள்ளத்தாற் கருதிச் செய்யப்படுதலின் அவை அவ்வுள்ளத்தையே நிலை பேறாய் பற்றி நிற்கும். வினை செய்தற்குக் கருவியாகிய உடம்பு ஒழியினும் அவ்வினைகள் ஒழியாவாய்த் தாம் பிறத்தற்கு நிலைக் களனாகிய உள்ளத்தைப் பற்றிக்கொண்டு பிறவிகடோறும் சேறலின் உள்வினை என்றார். அஃதீண்டு நல்வினைமேற்று, என்னை? ஐயறிவுக்குட்பட்ட பலகோடி உயிர்வகைகளுட்படாது ஓருயிரை மக்கட் பிறவியுட் படுவிப்பது அதுவே யாகலின் என்க. 'உள்வினை பிழைத்தும்’ என்பதிற் கருவிப் பொருள் படவரும் ஆலுருபு விரிக்க.

'மாநுடப் பிறப்பினுள் மாதா வுதரத்து, ஈனமில் கிருமிச் செருவினிற் பிழைத்தும்' என்றது தாய் தந்தையர் ஒருங்கு புணர்ந்தவழித் தந்தையின் உடம்பினின்றும் புறனாகிய வெண்பால் தாயின் கருப்பையுட் சென்றவளவானே, ஆண்டு அப்பாலினின்றுந் தோன்றிய எண்ணிறந்த புழுக்கள் அத் துணையும் முன்னரே அங்குள்ள தாய்க்கருவினோடு ஒன்று கூடுதற்குப் பெரிது முயன்று போர் இயற்றாநிற்ப, அவற்றுள் ஒன்று ஏனையவற்றைப் புறந்தள்ளித் தான் முற்சென்று அத்தாய் கருவினுட்பதியும் ஆற்றினை அறிவுறுத்தியது. இற்றை ஞான்றை மேல்புல நூலார் மிக ஆழ ஆராய்ந்த கண்டுரைக்குங் கருத் தோற்றமுறை, பன்னூறாண்டுகட்கு முன்னிருந்த நம்பெருமான் திருவாதவூரடிகளாற் பொருந்தக் கூறப்பட்டிருத்தல் பெரிதும் வியக்கற்பாலதொன்றா மென்க.

‘உதரம்' என்பது கருப்பை யெனப் பொருடரும் ஒரு

வடசொல்.

குன்றுதல் எனப் பொருள்படும் ஹீந என்னும் வடசொல் ஈனம் என ஆயிற்று.

‘கிருமி’ வடசொல்.

செரு - போர், சண்டை; திவாகரம்.

தாயின் கருப்யையுட்பட்ட வெண்பாலிற் றோன்றும் புழுக்கள் மிகுதியா யிருத்தலின் ‘ஈனமில் கிருமி' என்றார்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_25.pdf/325&oldid=1589610" இலிருந்து மீள்விக்கப்பட்டது