உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 25.pdf/326

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருவாசக விரிவுரை

293

கருக்கொண்ட தாயின் கருப்பை முதற் றிங்களில் தான்றிக் காய்ப்போன்ற வடிவுடையதாய் இருத்தலின் ஒரு மதித் தான்றியின் என்றருளிச் செய்தார்; மேல்பு நூலார் தாம் எழுதிய கருநூலிற் காட்டுங் கருப்பையின் வடிவு தான்றிக் காயைப்போல் உடல் திரண்டு முனைகுவிந்திருத்தல் காண்க.

இனி, முதற்றிங்களில் இருமையிற் பிழைத்தலாவது, தந்தையின் வெண்பாலிற் றோன்றிய புழுக்களில் ஒன்று தாயின் செம்பாலிற் றோன்றிய கருவிற் பதிந்து ஒன்றாகாமல் வேறாய் நின்றால் மகவு உண்டாமா றில்லை; மற்று அங்ஙனமின்றி அப் புழுக்கள் பலவற்றுள் ஒன்று ஏனையவற்றைப் பின்றள்ளித் தாய்க்கருவை யணுகி, அதனுள் தன் தலையை நுழைத்த வள வானே, தாய்க்கரு அப்புழுவினைத் தன்னகப்படுத்திக் கொண்டு, ஏனைப் புழுக்கள் தன்னை அணுகாவாறு தன் மஞ்சட் கருவி னின்றும் மெல்லியதொரு தோலினைத் தோற்றுவித்துத், தன்னும் புழு நுழைதற்கு வாயிலான துளையை உடனே அடைத்துவிடா நிற்கும்; அவ்வாறு செய்த பின்னர்த் தான் நுழைந்த புழுத் தாய்க் கருவிற் கரைந்து ஒன்றாய்ப் போக மகவு உண்டாவதாகும். ஒரோவழித் தாய்க்கரு நோயாலேனும் மயக்கம் ஏற்றப்படுதலாலேனும் அங்ஙனம் வழி யடைத்தலைச் செய்யாது வாளா இருந்திடுமாயின் மகவு உண்டாமாறில்லை. இந்நிகழ்ச்சியினைப் பண்டைக் காலத்திருந்த நம் அடிகள் நன்குணர்ந்து ‘ஒரு மதித்தான்றியின் இருமையிற் பிழைத்தும்’ என்றருளிச் செய்தமை பெரிதும் போற்றற்பால தொன்றா மென்க.

மதி, திங்கள் என்பன சந்திரற்குப் பெயராய் வருந் தமிழ்ச் சொற்கள்; பதினான்குநாள் வளர்ந்தும் பதினான்குநாட் டேய்ந்தும் இயங்கும் மதியின் இயக்கம் பற்றி வரையறுக்கப்படுங் காலக்கூறாகிய மாதத்திற்கும் அவை பெயராயின; இவ்வாறு வருதல் அளவை ஆகுபெயர் (தொல்காப்பியம் சொல் 116) சந்திரனை உணர்த்தும் மதி என்னும் பெயரை வடமொழி என்று கூறுவாருமுளர். அது பொருந்தாது. என்னை? அப்பொருளில் அச்சொல் அமர நிகண்டு முதலான வடநூல்களிற் காணப்படாமையானும், தமிழிற்குரிய அம் சாரியை ஏற்று மதியம் எனவும் அஃதேலாது மதி எனவும் அது பண்டைத் தமிழ் நூல்களிற் பரவி வழங்கு தலானு ம் என்பது.

னி

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_25.pdf/326&oldid=1589615" இலிருந்து மீள்விக்கப்பட்டது