உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 25.pdf/327

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

294

  • மறைமலையம் - 25

மதிக்கப்படுதலின் மதி என வாயிற்று என்பாரும், மதுவை யுடைமையின் மதி யெனவாயிற்று என்பா ரும் உளர். மதித்தல் எனப் பொருள்படும் முதனிலையும் மது வென்னும் பெயரும் வடமொழியிலன்றிப் பண்டைத் தமிழ் நூல்களில் வழங்கக் காணாமையின், அவற்றுள் ஒன்றை அடியாகக் கொண்டு பிறந்து மதி என்னும் பெயர் பண்டை நூல்களில் வழங்கிற் றெனல் பொருந்தாக் கூற்றா மென்க.

இனி 'இருமதி விளைவின் ஒருமையிற் பிழைத்த' லாவது: தந்தையின் வெண்பாலிற் றோன்றிய புழுக்களில் ஒன்று தாய்க் கருவிற் பதிந்த வளவானே, அக்கரு ஏனைப் புழுக்கள் தன்னுட் புகாவாறு, நோய், கள்மயக்கம் முதலிய காரணங்களாற் றடை செய்யாது வறிதே யிருந்திடுமாயின், அப் புழுக்கள் பலவும் அதனுள் நுழைந்து, முன்னரே புகுந்து ஒன்றுபட்ட புழு மகவாய் உருக்கூட வொட்டாமல் அதனைச் சிதைத்து விடும். இஃது ரோ வழி இரண்டாந் திங்களில் நிகழ்தலின், அந் நிகழ்ச்சிக்குந் தப்பிய படியை அறிவித்தவா றாயிற்று.

விளைவு - கருத்தோற்றம். ஒருமை - இரண்டும் ஒன்றுபட்ட

தன்மை.

இனி, 'மும்மதி தன்னுள் அம்மதம் பிழைத்த’லாவது: வாயில் அடைப்பட்டுக் கருத்தோன்றி வளருங் கருப்பை யினுள்ளே, முன்னெல்லாம் புறத்தே கழிந்து கொண்டிருந்த தாயின் மதநீர் இப்போது கழிவாயில் காணாமையிற் கரு வளர்தல் வேண்டிப் பெருகிவந்த நிறையாநிற்கும்; அதனாற் கருப்பை பெருக்க வயிறும் புடைக்கும்; இவ்வாறு வந்து பெருகும் மதநீர் தாங்க மாட்டாமல் அக் கருப்பை ஒரோ வொருகாற் கிழிந்து கருச் சிதைதலும் மூன்றாந் திங்களில் நிகழ்த லுண்டா கலின், அதற்குந் தப்பி வந்தமை அருளிச் செய்தார்.

மதம் மதநீர்.

னி, அங்ஙனம் வந்து பெருகும் மதநீர் கரிய நிறத்ததாய் நன்காந் திங்களிற் கருப்பையுள் நிரம்புதலின், அக் கருப்பையின் அகம் அப்போதும் பெரிதும் இருண்டு நிற்கும்; அவ் விருளுக்குந் தப்பி உயிரோடிருத்தல் அரிதாகலின் ஈரிரு திங்களிற் பேரிருள் பிழைத்தும் என்றருளிச் செய்தார்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_25.pdf/327&oldid=1589621" இலிருந்து மீள்விக்கப்பட்டது