உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 25.pdf/328

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருவாசக விரிவுரை

295

இனி, ஐந்தாந் திங்களிற் கருப்பையினுள் மதநீரும் இருளும் மேன்மேன் மிகுதலின் அவற்றினிடைப்பட்ட மகவு பிழைத்தல் அரிதென்பார் ‘அஞ்சு திங்களின் முஞ்சுதல் பிழைத்தும்' என்றார்.

“வழங்கியன் மருங்கின் மருவொரு திரிநவும்”என்பதனால் (தொல்காப்பியம் எழுத்து 483) ஐந்து அஞ்சு என மரூஉவாய்த் திரிந்தது.

L

முஞ்சுதல் - சாதல்; திவாகரம்.

கணவர் இல்லாக் காலத்தேனும், கைம்மை நிலை யிலேனும் பிழைத்துக் கருக்கொண்ட மகளிர் தாம் சூல் கொண் டமை ஆறாந் திங்களிற் புறத்தார்க்குக் கட்புலனாக, அவர் அதுகண்டு பழித்துத் தூற்றுவராகலின், அப் பழிமொழிக் கஞ்சி அம்மகளிர் அவ்வாறாந் திங்களிற் கருச் சிதைத்தற்கு முயலுதல் வழக்கம்; அங்ஙனஞ் சிதைக்கப் படுதலுக்குந் தப்பியவாறு தெரிப்பார் ‘ஆறு திங்களின் ஊறலர் பிழைத்தும்' என்றார்.

-

‘ஊறு அலர்’ கொலைக்குக் காரணமாகிய பழிச்சொல்; ஊறு கொலை; இனி இடையூறெனப் பொருள் கொண்ட மகவின் உயிர்க்கு இடையூறாகிய பழிச்சொல்லென உரைத் தலும் ஒன்று; இச் சொல்லிற்கு இவ்விரு பொருளும் உண்மை "ஊறிடையூறும் உற்றிடு கொலையும்” என்னுந் திவாகர சூத்திரத்தால் காண்க.

அலர் - பழிச்சொல்; பிங்கலந்தை. இனி, ‘ஊரலர்’ எனப் பாடங்கொண்டு கூறும் பழிச்சொல் எனப் பொருளுரைப்பினுமாம்.

ஊரவர்

னி, ‘ஏழு திங்களிற் றாழ்புவி பிழைத்தும்' என்பது கருப்பையி னுள்ளிருக்குங் கரு ஏழாந் திங்களில் எல்லா ங் உறுப்புகளும் செவ்வனே ஒருங்கு அமையப் பெறுதலானும், ஓரோவொருகால் மகளிர் சிலரின் கருப்பை இவ்வேழாந் திங்களிற் பெரும்பாலும் முதிர்ந்த மகவினைத் தாங்க மாட்டாமல் வெளிப்பட விடுதலானும் அதற்குந் தப்பிவந்த வாற்றினை அறிவுறுத்திய தாயிற்று. ஏழாந் திங்களிற் பிறக்கும் மகவு பன்னிரண்டு முதற் பதினான்கு விரற்கடை நிகளம் இருக்குமெனவும், அஃது உயிர்க்கவும் அழவும் பால் பருகவும் மாட்டு மெனவும், ஆயினும் அது மிகவும் வலிகுன்றிய

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_25.pdf/328&oldid=1589627" இலிருந்து மீள்விக்கப்பட்டது