உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 25.pdf/329

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

296

மறைமலையம் 25

-

நிலையிலிருத்தலால் நீராட்டப்படுதற்கு இறையாதாய்ப் பால் பருகும் நேரம் போக எஞ்சிய காலமெல்லாம் உறக்கத்திலேயே கிடக்குமெனவும், தன்னுடம்பினுட் சூடு பிறப்பித்தற்கு வேண்டிய வலிவுதானும் அதற்கப்போது மிக மெலிந்திருக்கின்ற தெனவும், அதனால் அம்மகவினை வெது வெதுப்பான கம்பலப் போர்வையாற் சுற்றித் தாயோ டணைத்துப் படுக்க வைத்தால் அஃது உயிர் பிழைத்துக்கொள்ளு மெனவும் மேல் புலக் கருநூலாரும் நன்காராய்ந்து எழுதுவர்.

‘ஏழ்' என்பது ஒற்றீறாகிய சொல்லென்று ஆசிரியர் தொல்காப்பியனார் கூறுகின்றமையின், ‘ஏழு திங்கள்' என்னும் புணர்ச்சிக்கண் வந்த உகரம் சாரியை என்க; இங்ஙனம் உகரம் ஏற்றுவருதல்,

66

அளவு நிறையும் எண்ணும் வருவழி நெடுமுதல் குறுகலும் உகரம் வருதலுங் கடிநிலை யின்றே ஆசிரியற்க"

என்பதனாற் (தொல்காப்பியம் எழுத்து 389) கொள்க,

'புவி' நிலமெனப் பொருடரும் புவநம் என்னும் வடசொற்

சிதைவு.

ஏழாந் திங்களுக்குப்பிற் கருப்பையிலுள்ள மகவு மிக விரைந்து வளர்தலானும், அதன் சுமை தாங்கமாட்டாமற் றாய் வருந்துதலே யன்றி அம் மகவும் உள்ளே நெருக்குண்டு வருந்து தலானும், அத் துன்பங்களுக் கெல்லாந் தப்பி யுய்ந்தமை தெரிப்பார் ‘எட்டுத் திங்களிற் கட்டமும் பிழைத்தும், ஒன்பதில் வருதரு துன்பமும் பிழைத்தும்' என்றருளிச் செய்தார்.

'கஷ்டம்' என்னும் வடசொல் கட்டம் எனத் திரிந்தது.

னிப் பத்தாந்திங்கள் கரு முற்றும் முதிர்ந்து வெளி வருதற்குத் தக்க காலமாதல் பற்றித் ‘தக்க தசமதி’ என்றார். தச என்பது ‘தசந்' என்னும் வடசொற் சிதைவு.

பத்தாந்திங்களிற்

கருவுயிர்க்குங்காற் றாய் படுந் துன்பங்கடல்போற் பெரிதாயிருத்தலின் அதனைத் துக்கசாகரம் என்றும், அத்துன்பத்தினிடையே வெளிப்படும் மகவும் துன்புறுதலின் அதனைத் துயர் என்றும் இருகால் ஓதினார்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_25.pdf/329&oldid=1589631" இலிருந்து மீள்விக்கப்பட்டது