உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 25.pdf/330

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருவாசக விரிவுரை

297

ஆறறிவோடு கூடிய தாய் படுந் துயர் எல்லையற்றதாயிருத்தலின் அதனைச் சாகரமாக உருவகப்படுத்தினார்; அவ்வாறு ஆறறிவு விளக்க மில்லாத பச்சைப் பசுங்குழவி படுந் துயர் அத்துணைப் பெரிதாகாமையின் அதனை வாளா துயர் என்று கூறுவாராயின

ரென்க.

‘சாகரம்’ கடல்; இது வடசொல்; சகரரால் அகழப்பட்ட மையிற் கடல் சாகர மெனப் பெயர் பெற்ற தென்பது வடநூல் வழக்கு.

ஆண்டுகடோறும் அடைந்த அக்காலை' என்பதன் இடையே மனிதப்பருவம் என்பது அவாய் நிலையால்

வருவித்துரைக்கப்பட்டது.

ஈட்டியும் என நிற்கற்பாலது எதுகை நோக்கி ‘ஈண்டியும்’ என மெலிந்தது.

-

எனை - எவ்வளவு, எத்துணை; இப்பொருட்டாதல் "எனை மாட்சித்தாயினு மில்” என்புழியுங் (திருக்குறள் 52) காண்க.

-

மலம் அழுக்கு; இது ‘மலங்கல்' என்னுந் தமிழ்ச் சொல்லினின்றுந் தோன்றிய பெயர். உடம்பின் தூய்மையையும் உயிரின் தூய்மையையும் பிறழச் செய்தலின் அப் பெயர்த்தாயிற்று. தமிழ் மொழியினின்று வடமொழிக்கட் சென்று வழங்கும் பல சொற்களுள் 'மலம்' என்பதும் ஒன்று.

மற்றைக் காலங்களினும் மலவருத்தம் சிறிது உண்டேனும், ஒரு நாள் முழுவதும் உண்ட உணவு அற்று மலக்குடரிற் சென்று திரண்டு கழியுங் காலம் காலைப்போதே யாகலிற் 'காலை மலம்’ என்றார்.

ஏனைக் காலங்களினும் பசித்து வருந்துதலுளதேனும், ஞாயிறும் ஞாயிற்றின வாயிலாற கிளர்ந்தெழும் ஆற்றல்களும் எழுச்சி பெற்று நிற்குங்காலம் நண்பகற்போதே யாகலின், அக்காலத் துண்டாம் பசித்துன்பம் பொறுத்தல் அரிதென்பார் ம் கடும் பகற் பசி' என்றார்.

பகலினும் அயர்வுண்டாங்கால் உறக்கம் வந்து கூடுதல் இயல்பேயாயினும் ஞாயிற்றின் ஒளியில்லா நள்ளிரவில் எல்லா வுயிர்களும் அயர்ந்துறங்குதல் இயற்கையாய் நிகழக் காண்டலின் 'நிசிவேலை நித்திரை' என்றருளிச் செய்தார்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_25.pdf/330&oldid=1589636" இலிருந்து மீள்விக்கப்பட்டது