உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 25.pdf/331

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

298

❖ 25❖ மறைமலையம் - 25

நள்ளிரவு எனப் பொருள்படும் ‘நிசீத’ என்னும் வடசொல் தமிழில் 'நிசி' என ஆயிற்கு.

காலம் எனப் பொருள்படும் வேலா என்னும் வடசொல் தமிழில் வேலை எனத் திரிந்தது.

நித்ரா' 'யாத்ரா' என்னும் வடசொற்கள் தமிழில் 'நித்திரை' ‘யாத்திரை' எனத் திரிந்தன. நித்திரை -உறக்கம்; யாத்திரை - வழிச் செலவு.

இனி, அழகாற் சிறந்த மகளிர்க்கு அவ்வழகினைப் பயத்தற் கண் அவர்தங் கரிய கூந்தல் முதலதாய்த் திகழ்ந்து கட்புலன் கவர்தலின் அதனை முன்னும், அதனையடுக்க அழகு பயப்பது கொவ்வைக்கனிபோற் சிவந்த அவர்தஞ் செவ்வாயே யாகலின் அதனை அதன் பின்னும், அவ்வாய் விரிவின்கட்டோன்றி அதனை யடுக்க அழகுறுத்துவன அவர்தம் வெள்ளிய பற்களே யாகலின் அவற்றை அதன் பின்னும், அவற்றை யடுக்கக் கார்மயில் போற்றோன்றும் அவர்தம் வடிவம்முற்றுங் காண்பார் கருத்துட் பதிதலின் அதனை அவற்றின் பின்னும், அத்துணை யழகிதாய அவர்தம் வடிவத்தைக் கண்டவளவானே அவர்மேல் வேட்கை மீதூரச் செய்வன அவருடைய மதர்த்த கொங்கை களுங் கயல் போற் பிறழும் விழிகளுமே யாகலின் அவ்விரண்டனையும் அதன் பின்னுமாக வைத்து முறைப்படுத் தோதினார்.ஒருவர் ஒருவரைக் காணுங்கால் அவரது கட்பார்வை ஏனையோரது கூந்தன்மேன் முதற்கட்சென்று படுதலும்,பின்னர் அவர் பேசுஞ் சொற்களைக் கேட்டற் பொருட்டு அவர் வாயை நோக்குதலும், அவர் பேசுங் காற்றோன்றும் வெண்பற்களை அதன்பின் நோக்கி மகிழ்தலும் எல்லாம் முறைமுறையே நிகழ்தல் இயல்பு.

தாங் காதலிக்கும் ஆடவர்க்குத் தங் காதற் குறிப்புப் புலனாக மகளிர் மெல்ல நகுதல் இயல்பாகலின், அவ்வியல் பினை உய்த்துணரவைப்பார் பற்களுக்குரிய ஏனைப் பெயர்களை உரையாத ‘நகை' என்னும் பெயரைச் சிறந்தெடுத்துரைத்தார்.

கருங்குழற் செவ்வாய் வெண்ணகைக் கார்மயில்' என்பதில் நாற்சீரும் முரண்டொடைநயம்பற்றி வந்தது.என்னை? 'மொழியினும் பொருளினும் முரணுதல் முரணே” என்றார் ஆசிரியராகலின் (தொல்காப்பியம் செய்யுள் 95)

66

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_25.pdf/331&oldid=1589641" இலிருந்து மீள்விக்கப்பட்டது