உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 25.pdf/332

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருவாசக விரிவுரை

299

கார்காலத்து மயில் மிகுதியுங் களிப்புடைத்தாய் ஆலதலிற் கார்மயிலை எடுத்தக் கூறினார்.

“சாயல் மென்மை” என்றார் ஆசிரியர் தொல்காப்பிய னார்; "சாயல் என்னுஞ் சொல் மெய் வாய் கண் மூக்குச் செவியென்னும் ஐம்பொறியான் நுகரும் மென்மையை உணர்த்தும்" (தொல்காப்பியம் சொல் 325) என்பர் உரைகாரர் நச்சினார்க்கினியர்.

எல்லா வுறுப்புகளும் ஒரே தன்மையவாம் மென்மை யுடைமைபற்றி ‘ஒருங்கிய சாயல்' என்றருளிச் செய்தார். “உடங்கு ஒருங்காகும்" என்பது திவாகரம்.

-

மதர்ப்பு உள்ளக் களிப்பு; உள்ளத்தின் கண்ணதாகிய களிப்புக் கொங்கையின் கொழுவிய திரட்சிக்கட் புலனாதலின் அவ்வினையை அதன் மேலேற்றினார்.

கச்சு

பட்டிகை; இயங்குங்கால் அசையாமைப் பொருட்டுக் கொங்கைமேற் கட்டப்படுவது. “வம்பு பிணிகை பட்டிகை வார்வடம், என்றிவை யைந்துங் கச்சென இசைப்பர்’ என்றார் திவாகரத்தும். இங்ஙனம் பிணிக்கப்படுங் கச்சும் அறும்படி திட்பத்துடன் நிமிருங் கொங்கையென அவற்றின் புத்திளமைச் செச்வி அறிவித்தாராயிற்று.

கதிர்த்து - ஒளி வீC; “கதிர்த்த நகைமன்னும்” என்றார் அடிகள் பிறாண்டும். (திருச்சிற்றம்பலக் கோவையார் 396)

-

பணைத்து பருத்து; திவாகரம்.

எய்த்து

-

இளைத்து; 'எய்த்த மெய்யேன்' என்பதன்

உரையிற் காண்க. (பொருநராற்றுப்படை68)

66

கொங்கைகள் மிகப் பருத்தால் அவற்றின் சுமை தாங்க லாற்றாது சிற்றிடை மிக வருந்துமென்பது பற்றி ‘எய்த்திடை வருந்த' என்றார்; இங்ஙனமே 'அம்மா முலைசுமந்து, தேயுமருங்குல்” என்று அடிகள் திருச்சிற்றம்பலக் கோவை யாரினும் அருளிச் செய்தமை காண்க.

"மாதர் காதல்" என்று (தொல்காப்பியம் சொல் 328) ஆசிரியர் தொல்காப்பியனார் ஓதலின், ஈண்டு மாதர் என்னுஞ் சொற் காதலை விளைக்கும் பெண்டிரை உணர்த்துதல் காண்க.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_25.pdf/332&oldid=1589646" இலிருந்து மீள்விக்கப்பட்டது