உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 25.pdf/333

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

300

மறைமலையம் - 25

கூர்த்த நயனக் கொள்ளை' என்பதிற் கூர்த்த என்னும் பெயரெச்சம் கொள்ளை என்னும் பெயரைக் கொண்ட முடிந்தது; கூர்த்த கொள்ளையாவது தாம் கவர்ந்த காதலர் உயிரை வெளவும் மிகுந்த சூறை; இது செயவல்லன அம் மாதரார்தம் அழகிய கட்பார்வையே யாகலின் இவ்வாறு கூறினார். திருவள்ளுவநாயனாரும் “இருநோக் கிவளுண்கண் உள்ள தொரு நோக்கு, நோய் நோக்கொன்றந்நோய் மருந்து” என்றருளிச் செய்தார். அடிகளும் கோவையாரில் “பிணியும் அதற்கு மருந்தும் பிறழப் பிறழமின்னும், பணியும் புரைமருங் குற்பெருந் தோளி படைக்கண்களே" என்றருளிச் செய்தமை காண்க. ஈண்டு அவ்விருவகை நோக்கும் அடங்கக் கூறினார். இனிக் கூர்மை என்னும் பண்படியாகப் பிறந்த வினையெனக் காண்டு அதனை நயனத்தின் மேல் ஏற்றிக் கூரிய கட்பார்வை யெனப் பொருளுரைத்தலும் ஒன்று. ஒன்று. நயனம் ஈண்டுக்

கட்பார்வை; இது வட சொல்.

மெய்ப்பொருள் அல்லாதவற்றை மெய் யென மயங்கிக் கோடலிற் பித்த உலகர் என்றார்; மருளுணர்ச்சியாவது, "மறுபிறப்பும், இருவினைப் பயனும், கடவுளும் இல்லை யெனவும், மற்று மித்தன்மையவுஞ் சொல்லும் மயக்க நூல் வழக்குக்களை மெய்ந்நூல் வழக்கெனத் துணிதல்." (திருக்குறள் 351 பரிமேலழகியார் உரை) இதனையே திருவள்ளுவ நாயனாரும்,

“பொருள்அல் லவற்றைப் பொருளென் றுணரும் மருளானாம் மாணாப் பிறப்பு’

என்று அறிவுறுத்தினமை காண்க.

பித்த உலகர் பலதிறத்தராய்ப் பெருகிக் கடத்தலின் அவரை ஒரு பெரிய நீர்ப்பரப்பாகவும், பொருளின்ப முயற்சி கனை அவர் ஓவாது சென்று புரியுமாறு அவருள்ளத்தைப் பலதலைப் படுக்கும் அவாவினை அந்நீர்ப்பரப்பினும் புகுந்து கலக்கும் மதகளிறாகவும் உருவகப்படுத்தினார்.

மத்தம் மதச் செருக்கு; திவாகரம்.

கல்வி யென்பது பல கலைப் பிரிவுகளை யுடைத்தாய் ஒவ்வொன்றும் எல்லை காணப்படாத பெரும் பரப்பிற்றாய் இருத்தலின் அதன்கண் வேட்கை மீதூரப் பெற்றார் அதன் வழியராயே சென்று உழல்வாரல்லது, இறைவனை இடை

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_25.pdf/333&oldid=1589651" இலிருந்து மீள்விக்கப்பட்டது