உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 25.pdf/334

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருவாசக விரிவுரை

301

யறாது நினைந்துபிறவியறுக்குந் தவமுயற்சியிற் புகாராதலிற், ‘கல்வி யென்னும் பல்கடற் பிழைத்தும்' என்று அவற்றிற்குந் தாம் தப்பியபடியை அறிவித்தாரென்க. அடிகள் ஈண்டு விலக்கிய உலகநூற் கல்வியேயன்றி அறிவுநூற்கல்வி யன்று; என்னை? தன்னையுந் தன் றலைவனையும் நினையவொட்டாது ஒருவனை நிலைபேறில்லாப் பொருள்வயிற் படுப்பிப்பது உலகநூற் கல்வியும், எக்காலுந் தன்னியல்பினையுந் தன் றலைவ னியல்பி னையும் அவன் இடையறாது நினையுமாறு செய்விப்பது அறிவுநூற் கல்வியுமா யிருத்தலின் என்க; இதுபற்றியே நாலடியாரிலும்,

66

"அலகுசால் கற்பின் அறிவுநூல் கல்லா துலகநூல் ஓதுவ தெல்லாங் - கலகல கூஉந் துணைஅல்லாற் கொண்டு தடுமாற்றம் போஒந் துணை அறிவார் இல்"

என்று கூறப்பட்டது.

னிப், பெருந்திரளான பொருள் பெற்றக்கால் அதனைக் காத்தலினும் அதனை மேன்மேற் பெருக்குதலினும் ஒருவற்கு மேன்மேல் முயற்சி செல்லுதலின், அவன் இறைவனை நினைந்து வழிபடுதற்கும், அவனடியார்க்கு அப்பொருளை வழங்கிப் பயன்படுத்தற்கும் மாட்டானாய், அம்முயற்சியில் ஈர்ப்புண்டு பல பாவங்களைச் செய்து மேலுமேலும் பிறவிக்கு வித்தாகிய வினைகளை ஈட்டித் துன்புறுவனாகலிற் செல்வ மென்னும் அல்லலிற் பிழைத்தும் என்று அதற்குந் தாந் தப்பியபடியை

அறிவுறுத்தருளினார்.

இனி, உடம்போடிருக்குங்காறும் ஐம்பொறியான் நு கர்தற்குரிய நுகர்பொருளெல்லாம் பெறவேண்டுவது இன்றி யமையாததா யிருத்தலானும், தன்னைச் சார்ந்துளார்க்கு வேண்டுவன தந்து அவரைப் பாதுகாத்தல் ஒவ்வோராண் மகற்கும் இன்றியமையாத கடமையா யிருத்தலானும், இவை யெல்லாங் கடை போகச் செய்தற்கு இன்றியமையாக் கருவியாவது பொருளேயாகலின், அஃதின்றி வறுமையான் நலிவார் இவ்வுலகத்தின் நடைப்பிணங்களே போல்வராக லானும் ‘நல்குரவென்னுந் தொல்விடம் பிழைத்தும்' என்று தாம்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_25.pdf/334&oldid=1589656" இலிருந்து மீள்விக்கப்பட்டது