உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 25.pdf/335

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

302

மறைமலையம் - 25

அவ் வறுமைக்குந் தப்பியபடியை அறிவித்தார். பொருளது இன்றியமையாமை,

“பொருளல் லவரைப் பொருளாகச் செய்யும் பொருளல்ல தில்லை பொருள்”

எனவும்,

“இல்லாரை எல்லாரும் எள்ளுவர் செல்வரை எல்லாருஞ் செய்வர் சிறப்பு”

எனவும்,

6

‘அறன்ஈனும் இன்பமும் ஈனும் திறனறிந்து தீதின்றி வந்த பொருள்

எனவுந் தெய்வப்புலமைத் திருவள்ளுவ நாயனார் கூறுமாற் றானும், அடிகள் திருக்கோவையாரில் “முனிவரும் மன்னரும் முன்னுவ பொன்னான்முடியும்” என ஓதுமாற்றானும் நன்கு தெளியப்படும்.

பிறர் நல்குவதனை ஊர்ந்து சென்றும் பெறுமாறு நலிந் தோனை ஏவுதலின் வறுமை ‘நல்குரவு' எனப் பெயர் பெற்றது; நல்கூர் முதனிலை.

நாடு நகரங்களும் விளைபுலங்களுந் தோன்றாத மிகப் பழைதாகிய காலத்தில் எல்லா மக்களும் வறியராயே யிருந்து வருந்தின ராகலின் நல்குரவைத் ‘தொல்லிடம்' என்றார்.

'விஷம்' என்னும் வடசொல் ‘விடம்' எனத் திரிந்தது.

இனிப் னிப் புல்லை முதற் றோற்றமாகக் கொண்டு இவ்வா றெல்லாம் மேன்மேற் பெருகிவந்த பல பிறவித்துறைகளை யெல்லாம் பிழைத்துவந்தமை ஈற்றில் ஒருங்குவைத்து அட க்கிப் புல்வரம் பாய பலதுறை பிழைத்தும் என்று அருளிச் செய்தார் என்பது.

-

வரம்பு - எல்லை; “புலங்கெட இறுக்கும் வரம்பில் தானை என்றார் புறத்தினும் (புறநானூறு 16) கட்புலனான ஓரறி வுயிர்களிற் புல்லினுஞ் சிறியது பிறிதின்மையின் அதனையே கீழ்ச்செல்லும் பிறவி களுக்கு முடிந்த எல்லையாகக் கூறினார்

என்க.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_25.pdf/335&oldid=1589661" இலிருந்து மீள்விக்கப்பட்டது