உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 25.pdf/336

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருவாசக விரிவுரை

தெய்வம் என்பதோர் சித்தம் உண்டாகி முனிவி லாததோர் பொருளது கருதலும் ஆறு கோடி மாயா சத்திகள்

45 வேறு வேறுதம் மாயைகள் தொடங்கின; ஆத்த மானார் அயலவர் கூடி

50

55

நாத்திகம் பேசி நாத்தழும் பேறினர்; சுற்றம் என்னுந் தொல்பசுக் குழாங்கள் பற்றி யழைத்துப் பதறினர் : பெருகவும் விரத மே பர மாக வே தியருஞ் சரத மாகவே சாத்திரங் காட்டினர்; சமய வாதிகள் தத்தம் மதங்களில் அமைவ தாக அரற்றி மலைந்தனர்;

மிண்டிய மாயா வாதம் என்னுஞ் சண்ட மாருதஞ் சுழித்தடித் தாஅர்த் துலோகா யதன்எனும் ஒண்டிறற் பாம்பின் கலா பேதத்த கடுவிடம் எய்தி

அதிற்பெரு மாயை எனைப்பல சூழவும்,

-

-

303

தெய்வம் என்பது ஓர் சித்தம் உண்டாகி முனிவு இலாதது ஓர் பொருளது கருதலும் கடவுள் என்று சிறப்பித்துச் சொல்லப் படுவதாகிய ஒரு கருத்து வரப்பெற்று வெறுப்பில் லாததாகிய ஒப்பற்றதொரு பொருளை எண்ணப் புகுந்த வளவிலே, ஆறு கோடி மாயாசத்திகள் வேறு வேறு தம் மாயை கள் தொடங்கின ஆறு கோடி யளவினவாகிய மாயையின் சத்திகள் வேறு வேறாகத் தமக்குரிய வஞ்சனைகளைச் செய்யத் தொடங்கி விட்டன, ஆத்தம் ஆனார் அயலவர் கூடி நாத்திகம் பேசி நா தழும்பு ஏறினர் - நம்புதற் குரியரான நேயரும் பிறரும் ஒன்று சேர்ந்து கொண்டு கடவுள் இல்லையெனப் பொய் வழக்குப் பேசி நாவும் தழும்பேறப் பெற்றனர், சுற்றம் என்னும் தொல் பசுக் குழாங்கள் பற்றி அழைத்துப் பதறினர் - உறவினர் என்று சொல்லப்படும் பழைய பசுக்கூட்டங்கள் எம்மைப் பிடித்து அழைத்துப் பதைத்தனர், பெருகவும் விரதமே பரம் ஆக வேதியரும் சரதம் ஆகவே சாத்திரம் காட்டினர் மிகுதியும்

-

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_25.pdf/336&oldid=1589665" இலிருந்து மீள்விக்கப்பட்டது