உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 25.pdf/337

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

304

❖ 25* மறைமலையம் - 25

விரதம் ஆற்றுதலே வீடுபேற்றினைத் தரும் இறைமுதற் பொருளாகச் சொல்லி வேதம் உணர்ந்த பார்ப்பனரும் தாம் அங்ஙனங் கூறுவதனை மெய்ப்படுத்திக் காட்ட நூல்களைக் கொணர்ந்து காட்டினர்.

-

சமய வாதிகள் தம் தம் மதங்களில் அமைவதாக அரற்றி மலைந்தனர் சமணக் கணக்கர்கள் தங்கள் தங்கட்குரிய மதங்களில் வந்து பொருந்தி யிருக்க வென்று வாய்விட்டுப் புலம்பிப் பூசலிட்டனர், மிண்டிய மாயா வாதம் என்னுஞ் சண்டமாருதம் திட்பங் காட்டிய மாயாவாதம் என்று சொல்லப்படும் கொடிய சுழல் காற்றானது, சுழித்து அடித்து ஆர்த்து - சுழன்று வீசிப் பேரொலி செய்ய, உலோகாயதன் எனும் ஒள் திறல் பாம்பின் உலோகாயதன்

-

-

என்று

சொல்லப்படும் ஒள்ளிய வலிமையினை யுடைய பாம்பினது, கலாபேதத்த கடுவிடம் எய்தி - கலை வேறுபாடுகளையுடைய கொடிய நஞ்சு வந்து பொருந்தாநிற்க, அதில் பெரு மாயை எனைப் பல சூழவும் - அங்ஙனம் அவ்விரண்டாலும் அலைக்கப் படுதலாற் பெரிய வஞ்சனைகள் எவ்வளவோ பல தம்மை வந்து கற்றவும் என்றவாறு.

மேலே கூறிப்போந்தவாறு புறத்தே உலகியன் முறையில் நேரும் பல நேரிடர்களுக்கெல்லாம் பிழைத்து, அகத்தே ஒருவற்கு அறிவு சென்று தெய்வம் ஒன்று உளதெனக் கருதுங் கருத்துண்டாகப் பெறுதல் மிக அரிதாகலின் தெய்வ மென்ப தோர் சித்த முண்டாகி என்றருளிச் செய்தார்.

தெய்வம் ஒளிவடிவிற் றாகிய கடவுளை உணர்ந்துத் தமிழ்ச் சொல்; “தெய்வஞ் சுட்டிய பெயர்நிலைக் கிளவியும்” என்றார் (தொல்காப்பியம் சொல் 4) ஆசிரியர் தொல் காப்பியனாரும்,

66

'தெய்வம் என்பது' என்னுஞ் சொற்றொடரில் என்பது எனுஞ் சொல் என்று சிறப்பித்துச் சொல்லப்படுவதெனப் பொருள் பயந்தது; என்னை? 'களவெனப்படுவது” என்பதற்குக் "களவென்றற்குச் சிறப்புடைத் தென்றவாறு ஊரெனப்படுவ துறையூர் என்ற விடத்துப் பிறவும் ஊருண்மை சொல்லி அவற்றுளெல்லாம் உறையூர் சிறப்புடைமை சொல்லுப. இங்குப் பிறவுங் களவுண்மை சொல்லி அக்களவுகட்கெல்லாம் இக்களவு சிறப்புடைத்து” என்று (இறையனாரகப் பொருள் 1ஆம் சூத்திர

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_25.pdf/337&oldid=1589670" இலிருந்து மீள்விக்கப்பட்டது