உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 25.pdf/338

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருவாசக விரிவுரை

305

உரை) ஆசிரியர் நக்கீரனார் உரை கூறினாரா கலினென்க. அதுபோல ஈண்டும் ஒருவனுள்ளத்தே நிகழும் பல நினைவு களுள்ளுந் தெய்வம் என்பதொரு நினைவு சிறந்த தாகலின் என்பது என்னுஞ் சொல் தலைப்பெய்தாரென்றுணர்க.

‘சித்தம்’ கருத்து; திவாகரம்; இது வடசொல்.

கடவுளுண்மையினை ஆராய்தலிற் சென்ற கருத்து ஈண்டுத் தெய்வ மென்பதோர் சித்தம் எனப்படுவதாயிற்று. கடவுளுண் மையினை ஆராயும் ஒரு கருத்துத் தமக்கு வரப்பெற்றுத் தாம் அதனை எண்ணிப் பார்க்கப் புகுந்த அளவிலே என அடிகள் அடியாருள்ளத்து நிகழ்ந்ததனைக் கூறினமையின் தாம் என்னும் எழுவாய் தொக்குநின்றது; உண்டாகி என்னும் செய்தெ னெச்சம் கருதலும் என்னுந் தன் வினை முதல் வினையையே கொண்டு முடிந்தது; அல்லது இதனைச் செயவெனெச்சத் திரிபாகக் கொண்டுரைத்தலும் ஒன்று.

எல்லா வுயிர்களும் பண்டு தொட்டே ஆணவமலத்துண் மறைந்து தமக்கு வேண்டுவன இவை இவை யென்று தெரிந்து கேளாமலே கிடப்பவும், அவற்றின்கட் பேரிரக்க முடையனாய், அவற்றிற்கு உடம்புகளையும் உலகங்களையுந் தந்து அறிவை எழச் செய்து இன்பத்தை வழங்கும் எல்லாம் வல்ல முதல்வன் அருட்செயலில் அவன் எதனையேனும் வெறுக்குஞ் செயல் ஒரு சிறிதாயினும் விரவக் காணாமையின் அதனைத் தெரித்தற் பொருட்டு ‘முனிவிலாததோர் பொருள்' என் றருளிச் செய்தார். அற்றேல், எவற்றின் கண்ணும் வெறுப்பில்லாமை போல விருப்பில்லாமையும் இறைவற்கு இயல்பன்றோ வெனின்; தமது நலத்திற்கு மாறாய் நிற்பாரை வெறுத்தலும், அதற்கிசைந்திருப் பாரை விரும்புதலும் தமது நலத்தின் பொருட்டுப் பிறரைச் சார்ந்திருப்பாரான மக்களுக்கே உளவாவனவன்றி, எல்லா நலனும் பிறரைச் சாராமலே ஒருங்குடைய இறைவற்கு உள வாகா; ஆகலின், இறைவற்கு வெறுப்பில்லாமை சொல்லவே விருப்பின்மையுந் தானே போதரு மென்க. அங்ஙனமாயின், உயிர்கண் மேல் இரக்கமுற்று அவற்றுக் கருள்புரிதலும் ஒரு விருப்பமாய்ச் செல்லாதோவெனிற், செல்லாது; என்னை? மக்களெல்லாருந் தம்முள் ஒருவரை யொரவர் விரும்புதல் ஒருவர் மற்றொருவர்பால் ஒரு நலம் பெறுவது குறித்தேயாம்; மற்று முதல்வனாவான்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_25.pdf/338&oldid=1589675" இலிருந்து மீள்விக்கப்பட்டது