உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 25.pdf/339

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

306

❖ - 25❖ மறைமலையம் - 25

தன்பால் இல்லாமல் ஏனை உயிர்கள் பாற் பெறுவதொரு நலம் வேண்டிநிற்பான் அல்லனாகலானும் ஏதொரு பயனும் நோக்காது ஏதொன்றும் வேண்டாது உயிர்கள் நலம் பெறு தலையே கருதி இறைவன் ஆற்றும் அருட்பாடு விருப்பமாதல் செல்லாமையானும் என்பது. அற்றேல், தன் நலங் கருதாது பிறிதொன்றற்கு நன்மை செய்ய விரும்புதல் குற்றமாகா மையின், தொரு குறைபாடும் இலனாகிய முதல்வன் உயிர் கட்கு நலந்தர விரும்புவது உண்டாகலின், அவற்கு விருப்பில்லை யென்றல் யாங்ஙனமெனின், தன்னைக் குறியாது பிறர்நலங்குறித் தெழும் விழுமிய விருப்பமே அருள் என ஆன்றோரால் வழங்கப்பட்ட தாகலின், அவற் கஃது இல்லையெனக் கூறுவார் ஈண் யாருமிலர். அதனானற்றே, ஈண்டு அடிகள் முனிவிலா மையை முதல்வற்கொரு சிறந்த இயல்பாய் எடுத்தோதினாற் போல 'விருப்பிலாமை'யை எடுத்தோதாதூஉ மென்க.

ஒரு சித்தம், ஒரு பொருள் என்று நிற்கற்பாலன செய்யு ளாகலின் ‘ஓர் சித்தம்’ ‘ஓர் பொருள்' எனத் திரிந்து நின்றன; இவ்வாறு வருதல் “வானாறிழிந்து மழைமின்னென வந்தொர் தேவன்" என்புழியுங் (சீவகசிந்தாமணி 15) காண்க.

'பொருளது' என்பதில் ‘அது’ பெயர்ப் பொருளை அசைத்து நின்ற அசை நிலை. இனி, முனிவிலாததொரு பொரு ளாகிய அதனை என்று பொருளுரைப்பினுமாம். கடவுளுண்மை நினைவு தோன்றி அதனை முதற்கண் ஆராயப் புகுவார்க்கு அதன் இருப்பு மட்டுமாகிய பொது வியல்பின்றி அதன் சிறப்பியல்பு விளங்காமையின் அந்நிலையில் அம்முதற் பொருள் ‘அது' வென ஒரு குறிப்புப் பெயரளவாய் வைத்துச் சொல்லப் பட்டது. ஆரிய மறைகளுட் கடவுட் பொருளியல்பு தெற்றென விளங்காமையின் அஃது ஆண்டு ‘அது, அது' எனவே வைத்து ரைக்கப்படுதலுங் காண்க.

ஆறுகோடி மாயாசக்திகள்’ என்றதில் கோடி என்னுஞ் சால் மிகச் பல என்னும் பொருளில் வந்தது. "தோள்வயிரந் தோன்றத் தொழுவா ரழுது நைவார் தொக்கோர் கோடி” என்ற விடத்துங் கோடி என்பதற்கு நச்சினார்க்கினியர் “அநேகர்" எனப் பொருளுரைத்தார். ஆறு மாயா சத்திகளாவன: இணை விழைச்சு, வெகுளி, இவறன்மை, மயக்கம், செருக்கு, அழுக்காறு என்பன; இவ்வாறினால் விரியும் வினைகள் அளவிளந்த

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_25.pdf/339&oldid=1589682" இலிருந்து மீள்விக்கப்பட்டது