உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 25.pdf/353

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

320

மறைமலையம் 25

அவர் தமக்கு அணிகலனாகவுங் கொள்வரென்பார் ‘நாடவர் பழித்துரை பூணதுவாக” எனவும் அருளிச் செய்தார்.

கசிதலாவது நெகிழ்ந்து மெல்ல வெளிப்புலனாதல்; ‘இப் புதுக்குடத்தில் நீர் கசிகின்றது' என உலக வழக்கினும் வருதல்

காண்க.

மறுகி - சுழன்று; “மறுகின் மறுகும் மருண்டு" என்புழியும் (திருக்குறள் 1139) இப்பொருட்டாதல் காண்க.

குழைதல்வாடுதல்; பிங்கலந்தை.

அநுகுலம்' என்பது ‘அதற்கு இயைய எனப் பொருள்படும் ‘அநுகூல' என்னும் வடசொற் றிரிபு.

விதிர்த்து - நடுங்கி; “அதிர்வும் விதிப்பும் நடுக்கஞ் செய்யும்”என்றார் (தொல்காப்பியம் சொல் 316) ஆசிரியர் தொல்காப்பியனார். “தொழுதுளம் உருகி அழுதுடல் கம்பித்து” என்று மேற் கூறியவாறே, ஈண்டும் அகங் குழைந் தனுகுல மாய்மெய் விதிர்த்து என ஓதுதல் கூறியது கூறல் ஆகாதோவெனின்; ஆகாது என்னை? மெய்யன்பின் மிகுந் தார்க்கு இத்தகைய மெய்ப்பாடுகள் அடுத்தடுத்துத் தோன்று தலானும் இவற்றை எடுத்துக்கூறுந் திருவாதவூரடிகளும் பேரன்பிலக்கப்பட்ட ஒரு பேரின்ப நிலைக்கண்ணே நின்று இவற்றை அருளிச் செய்தலானும், அப்பேரன்பின் வழிப் பட்டார்க்கு அவ்வன்பின் கிளர்ச்சியை ஒரு காலன்றிப் பலகாலுங் கூறுதற்கு அடங்காப் பெருவேட்கை எழுதலானும் என்பது; இது மேலும் உரைத்தாம். இவ்வாறே பின்வருவன வற்றிற்கும் உரைத்துக் கொள்க.

சகம் - உலகம்; ஈண்டு உலகத்தவர்மேல் நின்றது ஆகுபெயர்; ஜகத்‘ என்னும் வடசொற் றிரிபு.

சதுர' என்னும் வடசொல் ‘சதுர்’ எனத் திரிந்தது; ஈண்டு இஃது யான் வல்லேன் என்னுஞ் செருக்கினை உணர்த்தா நின்றது. யான் என முனைத்து நின்று அறிவார்க்கு இன்பம் புலனாகாது; இன்பம் நிகழ்வழியெல்லாம் யான் என்னும் முனைத்துணர்வு அழிந்துபடுதல் இம்மைக்கண்ணே ஐம்புல நுகர்ச்சியினும் நன்குவைத் தறியப்படும். அங்ஙனமாயின், அறிவின்றி இன்பம்நிகழுங்கொல்லோ வெனின்; அறிவின்றியும்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_25.pdf/353&oldid=1589751" இலிருந்து மீள்விக்கப்பட்டது