உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 25.pdf/354

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருவாசக விரிவுரை

321

இன்பம் நிகழ்தல் அயர்ந்துறங்கி எழுத்தோன்மாட்டுக் காணப் படுமாயினும், அறியாமையோடு கூடித்துய்க்கும் அவ்வுறக்க வின்பம் வேண்டற்பாற்றன்று; மற்று நனவின்கட்டுய்க்கு மின்ப மெல்லாம் அங்ஙனம் அறியாமைக்கண் நிகழ்வதின்றி அறி வோடு கூடியே நிகழுமென்பது எல்லார்க்கும் ஒப்பமுடிந்தமை யானும், ஆண்டுள்ள அறிவு து இது து வெனப் புடை பெயர்ந்தறியும் நீர்மையிற் றீர்ந்து நின்றாங்கு நின்றறறியும் இயல்பிற்றாதல் நுணுகி நோக்குவார்க்குத் தெற்றென விளங்கு தலானும் பேரின்ப நுகர்ச்சியும் உயர்ந்ததோ ரறிவோடுகூடியே நிகழுமென் றோர்க. கட்டுணர்வின்றி யறியப்படும் அப்பேரின்ப வியல்பு தெரித்தற்கே அடிகள் ‘சதுரிழந் தறிமால் கொண்டு சாருங்கதி' என்றருளிச் செய்தார் என்க. இன்னுஞ் சுட்டியறி தலின்றி நிகழும் அறிவு இன்பத்திற் றோய்ந்தவளவானே அவ்வின்பமே தானாய்த் தன்னை அதனின் வேறாகப் பகுத்துணருமாறின்றி மயங்குதலின் ‘அறிமால்' என்று மேலும்

அதனியல் விளங்கியருளினார்.

மால்

மயக்கம்; "மங்குன் மனங்கவர மான்மாலை நின்றேற்கு” என்னும் புறப்பொருள் வெண்பாமாலையினும் (பாடாண் படலம் 45) இஃதிப் பொருட்டாதல் காண்க.

‘கதி’ நிலை, வீடுபேறு எனப் பொருள்படும் ஒரு வடசொல். ‘பரம’என்னும் வடசொல் ஓசையின்பம் நோக்கிப் பரமா என ஈறு நீண்டது.

அதிசயம்’வடசொல்.

கன்று ஆ ‘கற்றா' என ஆயின; கன்றையுடைய ஆன்; வ்வாறு திரிதல் “மெல்லொற்றுத் தொடர்மொழி மெல் லொற் றெல்லாம், வல்லொற்றிறுதி கிளையொற்றாகும்” என்பதனான் (தொல்காப்பியம் எழுத்து 414) முடிக்கப்படும். கன்றைப் பிரிந்து ஆ பொறுத்தற் கரிதாந்துயர் உறல்போல, இறைவன் றிருவடியைப் பிரிந்திருக்கும் அடியாருள்ளமும் பெரிதும் ஆற்றாதாம் என்பது குறித்தா ராயிற்று.

ன்

உள்ளம் பொறிவழியே வரும் புறத்துப் பொருட் மையிற் பதித்தால் ‘மனம்' எனப் பெயர் பெற்றது; இச்சொல்லின் முதனிலை மன் மன்னுதல் - பதிதல், நிலைபெறுதல். இச்சொற் பிறப்பு இதுவாதல் அறியாதார் இதனை வடசொல் என்பர்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_25.pdf/354&oldid=1589756" இலிருந்து மீள்விக்கப்பட்டது