உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 25.pdf/355

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

322

மறைமலையம் - 25

கடவுள் ஒன்றுண்டெனக் கொண்டார்க்கு அக்கொள்கை நிலைபெறுவது அஃது அவர்க்கு ஓரோவழித் தோன்றி யருள் புரியும் வழியே யாகலான் மற்றோர் தெய்வங் கனவிலும் நினையாது.அருபரத் தொருவன் அவனியில் வந்து, குருபரனாகி யருளிய பெருமையை என்றருளிச் செய்தார். தெய்வ முண்டெனக் கொண்டார்க்கும் அஃது ஒருகாலுந் தோன்றி யருள் புரிந்தின் றாயின், அவர் தாம் இடர்ப்படுஞான்று தமக்குதவி புரியும் ஏனைச் சிறுதெய்வங்களையே முழுமுதற் கடவுளெனத் துணிந்து வழிபடா நிற்பர். இவ்வாறு இறைவனருட் பேற்றினுக்கு நேரே உரியரல்லாதார் தம்மினும் மேலோராய் நின்று தமக்கு உதவியாற்றிய சிறு தெய்வங் களையே முழுமுதற் கடவுளென நாட்டப்புக்கமையாற் பாஞ்சராத்திரம் புத்தம் முதலான புறச் சமயங்களும், வைரவம் வாமங் காளாமுகம் முதலான அகச் சமயங்களும், இவை யல்லாத பிறவுந் தோன்றுவவாயின. இனி முழுமுதற்கடவுளின் திருவருளை நேரே பெறும் பெருந் திருவுடையார்க்குக் கடவுளல்லாததைக் கடவுளென அங்ஙனம் மயங்கிக் கூறல் வேண்டாவென்க. மெய்ப் பொருளாம் முழுமுதற் கடவுளை நேரே காணப்பெற்றார்க்குப் பிறிதொன்றிலும் நினைவு செல்ல மாட்டாதாகலின் மற்றோர் தெங்வங் கனவிலும் நினையாது

என்றார்.

‘ஒருதெய்வம்' என்பது செய்யுளாகலின் ‘ஓர் தெய்வம்’ எனத் திரிந்து நின்றது. 'தெய்வம்' என்பது தேய் என்னும் முதனிலையிற் பிறந்த தமிழ்ச்சொல்; ஞெலிகோலிரண்டை ஒன்றோ டொன்று சேர்த்துத் தேய்த்தலால் தீ உண்டாம்; இங்ஙனமாகத் தேய்க்குந் தொழிலாற் பிறத்தல்பற்றி அழல் தீயெனப் பெயர் பெறலாயிற்று; இனி, முழுமுதற் கடவுள் தீயின்கண்ணே விளங்கித் தோன்றுமியல்பினை மேலே நன்கு விளக்கிக் காட்டின மாகலின், கடவுள் அவ்வியைவுபற்றித் தெய்வம் எனப் பட்டதென்க. வடமொழிக்கண் வழங்கும் 'தேவன்' என்னுஞ் சொல்லும் தேய் என்னும் இத்தமிழ் முதனிலையினின்றே தோன்றியதொன்றாம். வடநூலார் ‘தேவன்’ என்னுஞ் சொல் 'திவ்' எனும் முதனிலையிற் றோன்றி 'ஒளி யுடையவன்' எனப் பொருள்படு மென்ப. ஒளியுடைப் பொருள் தீயேயாதலானும், அத்தீயும் தேய்யதற்றொழி

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_25.pdf/355&oldid=1589761" இலிருந்து மீள்விக்கப்பட்டது