உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 25.pdf/356

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருவாசக விரிவுரை

323

லானன்றிப் பிறவாமையானும் ‘திவ்' என்னும் முதனிலைக்கும் முற்பட்டது. 'தேய்' என்னுந் தமிழ் முதனிலையோயா மென்று துணிக. இதனானன்றே ஆசிரியர் தொல்காப்பியனார் தெய்வஞ் சுட்டிய பெயர்நிலைக் கிளவியும் என்று (தொல்காப்பியம் சொல் 4) இச்சொல்லை எடுத்தாளுவா ராயினரென்பது.

அவநி’ நிலம் எனப் பொருள்படுவதொரு வடசொல்.

‘குரு’ என்பது பெருமையிற் சிறந்தோன் எனப் பொருள் படும் குரிசில் என்னுந் தமிழ்ச் சொல்லினின்றும் பிறந்து ‘ஆசிரியன்' என்னும் பொருளில் வழங்குவது; குருவன் குருவனே போற்றி (திருச்சரகம் 68) குரவன் என்பவையும் அன்ன. இஃதுணராதார் இவற்றையும் வடசொல்லென் றுரைப்பர்.

6

'திருவடியிணையைப், பிறிவினை யறியா நிழலது போல, முன் பின்னாகி' என்றது நிலத்தே நாட்டிய ஒருகோலின் நிழல் ஞாயிறு கீழ்த்திசையிற் றோன்றுங்கால் அதன் மேற்பக்கத்தே காணப்பட்டும், அது மேற்றிசையிற் சாயுங்கால் அந்நிழல் அக்கோலின் கீழ்ப்பக்கத்தே காணப்பட்டும் அதனைவிட்டுப் பிரியாமைபோலக் குருவடியில் எழுந்தருளிய முதல்வன் றிருவடி யிணைகளை நேரே கண்ட களித்தற்கு ஏதுவாய்நின்ற அன்பு அவன் மறைந்துழியும் மறவாது மெய்யடியார்க்கு முன்னும் பின்னுந் தொடர்புற்று நிகழுமாற்றினை விளக்கியபடியாம்.

பிறிவினை - பிறிது ஆதல்; அதாவது வேறாதல். ஒரு பொருளும் அதன் நிழலும் வேறு வேறாதல் யாண்டும் இல்லாமையின் ‘பிறிவினை யறியா நிழல்' என்றார். 'பிறிதாம் வினை' என வினைத் தொகையாக விரைக்க வினை - செயல்.

முனியாது - வெறாது; “முனைவு முனிவாகும்” என்றார் (தொல்காப்பியம் சொல் 386) ஆசிரியர் தொல்காப்பியனார்.

நைந்து கெட்டு; அஃதாவது வன் றன்மையழிந்து என்க; இப் பொருட்டாதல் “நறுங் கள்ளின் நாடு நைத்தலின்” என்புழியுங் காண்க.(புறநானூறு 97)

‘நெக்கு' என்பதன் முதனிலை நெகு. நெக்கு - நெகிழ்ந்து;

கனிந்து.

-

புலம் அறிவு;

நுண்மான் நுழைபுலம்" என்றார்

(திருக்குறள் 407) ஆசிரியர் திருவள்ளுவனாரும். ஈண்டு அது

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_25.pdf/356&oldid=1589765" இலிருந்து மீள்விக்கப்பட்டது