உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 25.pdf/357

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

324

மறைமலையம் - 25

பொறிவழிச் செல்லும் ஐந்தறிவுகளை உணர்த்திற்று; அன்பின் வழிப்பட்ட அறிவு அதன்வழி யன்றிப் பொறிவழிச் செல்லாமையின் ‘அன்பெனும் ஆறு கரையதுபுரள, நன்புலன் ஒன்றி” என்றார்; “ஐந்துபேரறிவுங் கண்களே கொள்ள” என்றார் சேக்கிழார் நாயனாரும்.

-

அரற்றுதல் வாய்விட்டுப் புலம்பல் (புறப்பொருள் வெண்பா மாலை, 11,9)

ரோமம்’ வடசொல்.

‘மொட்டித்து' என்னும் வினை மொட்டு என்னும் பெயர்ச் சொல்லி னடியாகப் பிறந்தது. மொடு முகை; திவாகரம். மாலைக்காலத்தில் தாமரைமலர் கூம்புதல்போல் ரு கைகளையும் சேரக் குவித்தலிற் ‘கரமலர் மொட்டித்து' என்றார்.

‘ஹ்ருதய’ என்னும் வடசொல் ‘இருதயம்’ என ஆயிற்று.

‘கண்களிகூர நுண்துளி யரும்ப என்பதிற் கூர வென்னும் செயவென் வாய்பாட்டு வினையெச்சம் காரண காரியப் பொருட்டாய்க் கண்கள் களிப்பு மிகுதலாலே சிறிய நீர்த் துளிகளைத் தோற்றாநிற்க, எனப் பொருடந்தது.

கூர்தல் உள்ளது சிறத்தல்; அதாவது மிகுதல்; தொல்காப்பியம், சொல் 314.

சாயா-கெடாத, முன்னுள்ளது நுணுகாத (தொல்காப்பியம்

சொல் 330)

‘அன்பினை' என்பது அன்பினால் எனப் பொருள்பட்டது உருபு மயக்கம் என்னை? “யாதனுருபிற் கூறிற்றாயினும், கொருள்சென் மருங்கின் வேற்றுமைசாரும்" (தொல்காப்பியம் சொல் 106) என்றார் ஆசிரியர் தொல்காப்பியனாராகலின். அன்பிலால் தழைப்பவர் என்க.

‘தழைப்பவர்’ என்பதன் ஈற்றில் இரண்டாம் வேற்றுமை யுருபாகிய ஐ தொக்கது. 'தழைப்பவர், தாயே யாகி' என வல்லெழுத்து மிகா தியல்பாய்ப் புணர்தல்

"உயிர் ஈறாகிய உயிர்திணைப் பெயரும் புள்ளி யிறுதி உயிர்திணைப் பெயரும் எல்லா வழியும் இயல்பென மொழிப்"

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_25.pdf/357&oldid=1589770" இலிருந்து மீள்விக்கப்பட்டது