உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 25.pdf/358

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருவாசக விரிவுரை

என்பதனான் (தொல்காப்பியம் எழுத்து 153) உணர்க.

325

தன்னைப் பாதுகாத்தலும் வளர்த்தலும் அறியாமையாற் றன்செய லற்றுக் கிடக்குங் குழவியைத் தாய் தானே பாது காத்தலும் வளர்த்தலுங் கருத்தாய்ச் செய்து போதருமாறு போல, தஞ்செயல் முற்றுமற்று இறைவனையே முழுதுஞ் சார்ந்து நிற்கும் மெய்யன்பரை அவ்விறைவனே பாதுகாத்து வளர்ப்பனாகலின் சாயா அன்பினை நாடொறுந் தழைப்பவர், தாயே யாகி வளர்த்தனை போற்றி என் றருளிச் செய்தார். இவ்வா றிறைவன் மெய்யன்பரை என்றுகொண் டருளுமுறை,

“இவனுலகில் இதம்அகிதஞ் செய்த எல்லாம்

இதம்அகிதம் இவனுக்குச் செய்தார்பால் இசையும் அவன் இவனாய் நின்றமுறை ஏகன் ஆகி அரன்பணியின் நின்றிடவும் அகலுங் குற்றம் சிவனும் இவன் செய்தியெல்லாம் என் செய்தி என்றுஞ் செய்ததெனக் கிவனுக்குச் செய்த தென்றும் பவம்அகல உடனாகி ஏன்றுகொள்வன் பரிவாற் பாதகத்தைச் செய்திடினும் பணியாக்கி விடுமே”

என்று அருணந்தியடிகள் கூறுமாற்றால் (சிவஞானசித்தியார் 10,1) அறியப்படும் என்பது

மெய்தரு வேதியன் ஆகி வினை கெடக்

கைதர வல்ல கடவுள் போற்றி

-

ரு

மெய் தரு மெய்ப்பொரு ளுணர்ச்சியினைத் தரும், வேதி யன் ஆகி - மறையோன் ஆகிவந்து, வினைகெட - எச்ச வினை ஏறு வினைகள் அழியுமாறு, கைதர வல்ல - உதவி செய்ய வல்லவனாகிய, கடவுள் போற்றி -கடவுளே வணக்கம் என்ற

வாறு.

மெய் யென்றது ஈண்டு மெய்ப்பொரு ளுணர்ச்சியினை.

மறையோன் வடிவிற் போந்து இறைவன் தமக்கு மெய்ப் பொருளுணர்ச்சியினைத் தந்தருளினமை அடிகள் ஈண் டருளிச்

செய்தார்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_25.pdf/358&oldid=1589775" இலிருந்து மீள்விக்கப்பட்டது