உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 25.pdf/359

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

326

மறைமலையம் 25

தனை

ஆணவ முனைப்பால் உயிர்கள் செய்யும் வினைகள் ஏன்ற வினையும் ஏறு வினையும் என இருதிறத்தவாம்; இவை தம்முள் ஏன்றவினை யென்பது தொகைவினையுந் தவக்கவினையு மென மறித்தும் இருவகைப்படும்; இவற்றுள் தொகைவினையாவது மேலைப் பிறவிகள் பலவற்றினுந் தொகுக்கப்பட்டது. வடநூலார் சஞ்சித கன்ம மென்ப; துவக்க வினையாவது மேற் பிறவியிற் செய்தவை கீர்ப்பிறவியில் வந்து நுகரப்படுதற்குத் துவக்கமாய் நிற்பது. இதனை வடநூலார் பிராரத்த கன்ம மென்ப; இனி ஒரு பிறவியில் ஒருவராற் செயப்பட்டு ஏறுவது ஏறுவினையென் நுணரற்பாற்று. இதனை வடநூலார் ஆகாமிய கன்ம மென்ப. இம்மன்றனுட் டொகைவினையெல்லாம் இறைவன் குருவடிவிற்றோன்றி நோக்கும் நோக்கவனலால் எரிந்தொழியும்; துவக்கவினை யெல்லாம் உடலுளதாங்காறும் உளவாகி அது கழியுங்கால் உடன் கழியும்; இனி ஏறுவினையோ வெனிற் குரவன் அறிவுறுக்கும் மெய்யறிவானே சுடப்பட் டொழியும் ஈண்டு வினையென்றவை தொகைவினையும் ஏறுவினையுமே யாம். என்னை? ஆசிரியனருளால் ஒழிவன அவ்விரண்டுமேயாகலின், உமாபதிசிவனாரும் “ஏன்ற வினை யுடலோ டேகும் இடை ஏறும் வினை தோன்றில் அருளே சுடும்” என்று (திருவருட்பயன் 10,8) அருளிச் செய்தமை காண்க.

கைதருதல் - உதவி செய்தல் எப்பொருட்டன்மையுங் கடந்து நிற்றலிற் கடவுள் எனும் பெயர் இறைவற் காயிற்று. ஆடக மதுரை அரசே போற்றி

90

கூடல் இலங்கு குருமணி போற்றி தென்றில்லை மன்றினுள் ஆடி போற்றி இன்றெனக் காரமு தானாய் போற்றி

ஆடக மதுரை அரசே போற்றி - பொன்வண்ணமாய் விளங்கும் மதுரைமா நகருக்கு அரசனே வணக்கம், கூடல் இலங்கு குருமணி போற்றி - மதுரையில் விளங்காநின்ற நிறம் பொருந்திய மணியே வணக்கம், தென்தில்லை மன்றினுள் ஆடி போற்றி தெற்கின்கண்ணதான தில்லை அம்பலத்தில் ஆடினவனே வணக்கம், இன்று எனக்கு ஆர்அமுது ஆனாய் போற்றி - இன்றைக்கு அடியேனுக்கு அரிய அமுதமாயினவனே வணக்கம் என்றவாறு.

-

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_25.pdf/359&oldid=1589780" இலிருந்து மீள்விக்கப்பட்டது