உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 25.pdf/360

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருவாசக விரிவுரை

327

ஆடகம் - பொன்; 'ஹாடகம்’ என்னும் வடசொல் தமிழில் ஆடகம் என்றாயிற்று. ஆ

தடாதகைப் பிராட்டியாரை மணந்து மதுரைமா நகர்க்கு மன்னனாய் முடிகவித்து இறைவன் செங்கோல் ஓச்சினான் என்னும் புராண வழக்குப்பற்றி ‘மதுரையரசே' என்றார்.

மதுரைமாநகர் கடல் எனப் பெயர் பெற்ற வரலாறு பெரும்பற்றப்புலியூர் நம்பி திருவிளையாடலிற் பின் வருமாறு கூறப்பட்டது: “முன்னொருகால் வருணன் செருக்குடையனாய் மதுரை யாலவாய்ப் பெருமான் பெருமையை அறிவான் வேண்டிக் கடலை மதுரைமேல் ஏவினானாக, அது பெரிதும் பொங்கிப் புரண்டு பெருகி மதுரையை விழுங்குதற்கு வரா நின்றது; அது கண்டா ரெல்லாரும் நிரம்ப வெருண்டு இறைவனைச் சென்று தொழுது குறையிரப்ப, இறைவனும் பொன் முதலியவற்றைச் சொரியும் நான்கு மழைகளை ஏவிக் ள கடல் முழுதும் பருகச் செய்தனன். அது கண்டு வருணன் மீண்டுஞ் செருக்குற்றுத் தனக்குரிய மழைகளை யெல்லாம் வருவித்து மதுரைமேற் பெரும்புனல் பெய்து எல்லா வுயிர்களையும் வருத்துக என்று விடுக்க, அவைகள் ஒருங்கு திரண்டு நீர் பொழியப் புகுதலும், இறைவன் திரும்பவும் அந் நான்கு பெரும் புயல்களையும் அழைத்து, அவை நான்கும் நான்கு மாடங்களாய் ருங்குகூடி மேலே பந்தரிட்டாற் போல் இருக்குமாறு கற்பித்தான். அக்கூடற்பந்தரின்கீழ் நான் மாடங்களிலும் ஆண்டுள்ளா ரெல்லாருஞ் சேர்ந்து குழுமி யினிதிருந்தனர். வருணன் ஏவிய மழைக் கூட்டங்கள் பெய்த நீரெல்லாம், இறைவனுக்குரிய அந்நாற்பெரும் புயல்களும் சுவறிப் போகவே, வருணன் வெள்கிச் செருக்கற்று இறைவனைத் தொழுது உய்ந்தான். இங்ஙனமாக நாற்பெரும் புயல்கள் ஒருங்கு கூடிக் காத்தமையால், மதுரைமாநகர் கூடல் எனப் பெயர் பெற்ற தென்ப.”

66

இலங்குதல் - விளங்குதல்; இச்சொல் இப்பொருட்டாதல் லங்கிழாய் இன்று மறப்பின்” என்னுந் திருக்குறளுரையிற் (திருக்குறள் 1262) காண்க.

குருமணி - நிறஞ் சிறந்த மணி; “குருவுங் கெழுவும் நிறனா கும்மே" என்றார் ஆசிரியர் தொல்காப்பியனார் (தொல்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_25.pdf/360&oldid=1589784" இலிருந்து மீள்விக்கப்பட்டது