உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 25.pdf/361

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

328

மறைமலையம் - 25

காப்பியம் சொல் 301) திருப்பெருந் துறையிலன்றிக் கூடன்மா நகரில் இறைவன் ஆசிரியனாய் வந்திலாமையின் ஈண்டு ஆசிரியமணி எனப் பொருளுரைத்தல் பொருந்தாது.

திருவாலங்காட்டி லாடும் மணிமன்றிற்குத் தெற்கே உளதாதல் பற்றித் தில்லைமன்று தென்றில்லைமன்று எனக் கூறப்பட்டது. அடிகள் ஈண்டு மதுரையை நோக்கி அதனைக் கூறுகின்றாரல்லர்; என்னை! அதற்கு அது வடக்கின்கண்ண தாகலின் என்பது.

""

போல

அரு அமுது ஆர் அமுது என்றாயின; "ஆரிடர் அழுவத்து என்புழிப் (மலைபடுகடாம் 368) பெறுதற்கரிய அமுது என்று பொருளுரைத்துக்கொள்க.

95

மூவா நான்மறை முதல்வா போற்றி

சேவார் வெல்கொடிச் சிவனே போற்றி மின் ஆர் உருவ விகிர்தா போற்றி கன்னார் உரித்த கனியே போற்றி காவாய் கனகக் குன்றே போற்றி ஆவா என்றனக் கருளாய் போற்றி

-

-

மூவா நால்மறை முதல்வா போற்றி மூத்தலில்லாது என்றும் ஒரு தன்மையவான நான்கு மறைகட்கும் முதல்வனே வணக்கம், சே ஆர் வெல் கொடிச் சிவனே போற்றி -ஆனேற்றின் வடிவு நிறைந்த வெல்லுங் கொடியினை உயர்த்திய சிவனே வணக்கம், மின் ஆர் உருவ விகிர்தா போற்றி மின்னை யொத்த உருவ வேறுபாட்டினை யுடையோனே வணக்கம், கல் நார் உரித்த கனியே போற்றி - கல்லின்கண் நார் உரித்த கனியையொப் பானே வணக்கம், காவாய் கனகக் குன்றே போற்றி - காத்திடு வாயாக பொன் மலையைப் போன்றவனே நினக்கு வணக்கம், ஆ ஆ என்றனுக்கு அருளாய் போற்றி ஐயோ எனக்கு அருள் புரிவாயாக; உனக்கு வணக்கம் என்றவாறு.

இந்நிலவுலகத்து மொழிகளுட் பண்டைக் காலந்தொட்டு இன்றுகாறும் இறவாது வழங்குவது தமிழ்மொழி ஒன்றே யல்லது பிற அன்மையானும, என்றும் உளனாகிய இறைவன் தன்போல் என்றும் உளதாகிய தமிழ்மொழிக்கண் அன்றி இடையே இறந்துபட்ட ஆரியம் முதலான மொழிகளில் உண்மை நுண் பொருள்களை அறிவுறுத்தல் உயிர்கட்குப் பயன்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_25.pdf/361&oldid=1589789" இலிருந்து மீள்விக்கப்பட்டது