உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 25.pdf/362

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருவாசக விரிவுரை

329

படாமையின் அவன் அவற்றை அவற்றின்கண் அருளுதல் ஏலாமையானும், அறம் பொருள் இன்பம் வீடு என்னும் உறுதிப்பொருள் நான்கனையும் வகுத்துக் கூறுவனவே நான் மறை எனப்படுதற்குப் பொருத்தமா மன்றி, ஒரு காலத்து இருக்கு என ஒன்றேயாயும் பின் ஒரு காலத்து அவ் இருக்கினின்றும் எடுத்துச் சில கூட்டி எசுர் சாமம் எனப் பிரித்துச் சேர்க்கப்பட்டு மூன்றேயாயும், ஏனை யொருகாலத்து அம் மூன்றினின்றும் பிரித்தெடுத்துத் தொகுத்த அதர்வணம் என ஒன்று கூட்டப்பட்டு நான்காயும் வெவ்வேறாய் வழங்கிய ஆரிய மறைகளை நான்மறைகள் எனத் தொன்று தொட்டு வழங்குதல் ஏலாமையானும் அடிகள் ஈண்டு மூவா நான்மறை என்று அருளிச் செய்தது மூத்தலில்லாது என்றும் இளமைச் சவ்வியோடு திகழுந் தமிழ் நான்மறைகளேயா மென்க. இறைவன் அருளிச்செய்த மறைகள் அறம் பொருள் இன்பம் வீடு என்னும் நாற் பொருள்களை அறிவுறுத்து மென்பதூஉம், அப்பொருள்கள் அடங்கிய நாற்கூறான மறைகளை இறைவன் திருவால நீழற்கீழ் எழுந்தருளி அருந்தவத்தோர் நால்வர்க்கு அறிவுறுத் தருளின னென்பதூஉம்,

66

ஆல நீழல் அன்றிருந் தறநெறி

நால்வர் கேட்க நன்கினி துரைத்தனை”

யினும்,

என்று நக்கீரர் அருளிச் செய்த திருவெழு கூற்றிருக்கை

“அருந்தவருக் காலின்கீழ் அறமுதலா நான்கனையும்

இருந்தவருக் கருளுமது எனக் கறிய இயம்பேடீ அருந்தவருக் கறமுதல்நான் கன்றருளிச் செய்திலனேற் றிருந்தவருக் குலகியற்கை தெரியாகாண் சாழலோ"

என்று அடிகள் அருளிச் செய்த திருச்சாழலினும்,

“அன்றாலின் கீழிருந்தங் கறம்புரிந்த அருளாளர்” என்று திருஞானசம்பந்தப் பெருமானும்,

66

‘அன்றாலின் கீழிருந்தங் கறஞ்சொன் னானை திருநாவுக்கரசு நாயனாரும்,

" என்று

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_25.pdf/362&oldid=1589794" இலிருந்து மீள்விக்கப்பட்டது