உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 25.pdf/363

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

330

66

மறைமலையம்

25

அன்றாலின் னிழற்கீழ் அறம் நால்வர்க்கருள் புரிந்து என்று சுந்தரமூர்த்திநாயனாரும் அருளிச் செய்த தேவாரத் தினும் இனிது தெளிக்கப்பட்டமை காண்க. சிவபெருமான் அறமுதலாகிய நாற்பொருளடங்கிய நான்மறைகளைத் திருவால நீழற் கீழிருந்து அருந்தவர் நால்வர்க்கு அருளிச் செய் சய்தன னென்னும் இத்தொன்று தொட்ட வரலாறு ஆரியவேத வரலாறுகளுள் ஒரு சிறிதுங் காணப்படாமையின், இது தமிழ் மறைகள் வந்த வரலாறே தெரிப்ப தென்பது நன்கு பெறப்படும். அல்லதூஉம் உறுதிப் பொருள்களை அறம் பொருள் இன்பம் வீடு எனப் பகுத்தலும், பகுத்த அம்முறையே அவற்றை விளக்கு தலுந் தமிழ் நூற்கண் அன்றி வடநூல்கண் இல்லாமை 'திருக்குறளாராய்ச்சி’யினுந் தெற்றென விளங்கிப் போந்தாம். அதனாலும் அவற்றை அம்முறையே கூறும் மறைகள் தமிழ் மொழிக்கண்ணவா மென்றலை நன்கு நிறுவு மென்க.

அற்றேல், இறைவன் அருளிச்செய்த மறைகள் தமிழ் மொழிக்கண் யாவையோ வெனிற் கூறுதும். இறைவன் மறைகளை அருளிச்செய்கின்றுழி நம்மநோரைப் போல் ஏடும் எழுத்தாணியுங் கொண்டு அவைதம்மை எழுதி வைத்துப் பின்னர் அவற்றைப் பிறர்க்கு அறிவுறுத்துவா னென்று கொள்ளற்க. நம்மநோ ரெல்லாந் தாந்தாம் அறிபவற்றை அடுத்தடுத்து மறத்தலும், பின்னரவற்றை வருந்தி முயன்று நினைவுகூர்தலும் ஆகிய சிற்றறிவுஞ் சிறு தொழிலும் உடை ராகலான். அவர் தாம் ஆராய்ந்தறிந்தவற்றை மறவாதிருத்தற் பொருட்டு ஏடும் எழுத்தாணியுங்கொண் டெழுதிவைப்பர்.மற்று இறைவனோ எல்லாவற்றையும் இருந்தாங்கிருந்து ஒருங்கறியும் முற்றறிவும் முழுத்தொழிலும் உடையனாக லானும், அதனான் அவன் நினைப்பு மறப்புக்கள் இலனாக லானும் அவனருளிச் செய்வன வெல்லாம் அவற்றை ஏற்குந் தரத்தராய் உண்மை நுண்ணறிவு மிக்கு அவனோ டொன்றி யைந்து நிற்கும் அருந்தவத் தோர்பாற் பொருந்தி அவர்வயி னின்னும் புலனா மென்று தெரிந் துணர்ந்து கொள்க. இனி, இறைவன் அவ்வாறு அருந்தவத்தோர் உண்ணின்று அவற்றை அருளுமிடத்து ஆரிய மறைகளுட் போல வாளா வரம்பின்றி மிகுத்தருளிச் செய்வானல்லன்.

ஒரு சிறு தீப்பொறி பேரளவி னதாகிய பஞ்சுப் பொதியை எல்லாம் ஒரு நொடியிற் கொளுத்தி விடுமாறு போல, அவன் தன்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_25.pdf/363&oldid=1589798" இலிருந்து மீள்விக்கப்பட்டது