உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 25.pdf/364

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருவாசக விரிவுரை

331

அருளறிவு அருந்தவத்தோர் உள்ளத்தில் முனைத்து நின்று அதனை உந்திய வளவானே, அவர்க்கு அவ்வரும் பெருநுண் பொருள்கள் தோன்றாநிற்கும்; பின்னர் அவர் அவற்றை வழிபடுத்துத் தொகுத்தும் விரிந்துந் தொகைவிரி யாக்கியும் நூலியற்றாநிற்பர். இவ்வாறு இறை வனால் அறிவுறுக்கப்பட்டு நூலியற்றினார் தொல்காப்பியனாரும், இறையனாரும், திருவள்ளுவனாரும், திருஞான சம்பந்தரும், மெய்கண்ட தேவரும் என்று இத் தொடக்கத்தினர் ஆவர். இவருள் தால்காப்பியனாரும் திருவள்ளுவனாரும் அருளிச் செய்த தொல்காப்பியமுந் திருக்குறளும் அறம் பொருளின்பம் வீடென்னும் ன்னும் நாற்பொருள்களையுந் தெளித்து ரைக்குந் தமிழ்மறைகளாம். தொல்காப்பியம் இந்நாற் பொரு ளோடு இவற்றை யுள்ளவாறுணர்தற்குக் கருவியாய எழுத்துச் சொல் யாப்பு என்னும் எழுத்தோசை இலக்கணமும் வகுத்தோ துவதாம். இறையனார் அருளிச் செய்த களவியல் இன்பத்துப் பால் ஒன்றனையே விரித்துரைக்கும் மாண்பிற்றாம். திருஞான சம்பந்தப் பெருமான் முதலான சமயாசிரியர் நால்வரும் அருளிச் செய்தவை இறைவனை வழிபடு முறையால் வீட்டியல்நெறி அறிவுறுத்தும் மாப்பெருந் தகையவாம்; மெய்கண்டதேவ நாயனார் அருளிச்செய்த சிவஞானபோதம் நூன்முறையால் முப்பொருட் பொது சிறப்பியல் தேற்றி உயிர்களை வீட்டிய னெறிக்கண் உய்க்கும் முடிந்த சிறப்பிற்றாம். இவையும் இன்னோ ரன்ன பிறவு மெல்லாம் அடிகள் ‘மூவா நான்மறை' என்றருளிய தன்கண் அடங்குமென்க.

அஃதொக்குமன்னாயினும், திருஞானசம்பந்தப் பெரு மானும் மெய்கண்ட தேவ நாயனாரும் அடிகள் காலத்திற்குப் பிற்பட்டெழுந்தவ ராகலான் அவர் அருளிச் செய்தவற்றையும் அடிகளருளிய இதன்கட் கொண்டுவந்து அடக்குதல் யாங்ஙனம் பொருந்து மெனின்; அவ்விருவரும் அருளிச்செய்த சொற்களும் பொருள்களும் என்றும் நிலைபேறாயுள்ள உண்மைகளை அறிவுறுப்பனவாமாகலின், அவர்க்கு முன்னும் அவை இறைவன் மாட்டுண்மை ஐயுறற்பாலதன்றாம். அதுவேயுமன்றி, அடிகட்கு இறைவன் குருவடிவிற் றோன்றி அறிவுறுத்தருளியது சிவஞான போத மெய்ப்பொருளே யாகலின், அதுவும் முன்னரே றைவன்பா லுண்மை பெற்றாம். பெறவே, 'மூவா நான்மறை’

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_25.pdf/364&oldid=1589803" இலிருந்து மீள்விக்கப்பட்டது