உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 25.pdf/365

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

332

மறைமலையம் - 25

என்றதன்கண் அவ்விரண்டும் அடங்குமென்றல் வாய்வதேயா மென்க.

அவ்வாறு கொள்ளின், ஆரிய வேதங்களும் முன்னரே இறைவன்பால் அமைந்து கிடந்து பின்னர் அவனருட் குரியரான முனிவரர் வாயிலான் வெளிவந்தன வென்று உரையாமோ வெனின், உரையாமன்றே. இறைவனருளாற் றோன்றிய நூல் களாயின அவ்விறைவற்குரிய பேரறிவுத்தன்மை அவற்றின்கட் காணப்படுதல் வேண்டும்; மற்று அவைதம்மோடு, தொல் அ காப்பியந் திருக்குறள் சிவஞானபோதம் முதலிய மெய்ந்நூற் பொருள்களை ஒப்பவைத்து நடுநின்று நோக்குவா ரெவர்க்கும் மற்றித் தமிழ்மறைகளுட் காணப்படும் அரும்பெரு நுண் பொருட் பெற்றி ஆரிய வேதங்களுள் ஒரு சிறிதுங் காணப் படாமை எளிது விளங்கு மாகலின் இவற்றோடொப்ப அவை களும் இறைவனருளாற் பிறந்தனவென்றால் பொருளில் புன்மொழிகளாமென்க. அற்றேல், ஆரிய வேதங்களும் சிவ பிரான் அருளிச் செய்தனவே யென்று புராணங்களுள் ஆண்டாண்டுக் கூறப்படுதல் என்னை யெனின்; எல்லா வுயிர்களின் அறிவு விளக்கத்திற்கும் ஏதுவாய் இறைவன் அவைகளின் உண்ணின்று இயக்கும் பொதுவியல்பு பற்றி அவ்வுயிர்கள் செய்தனவற்றையும் இறைவன் மேலனவாகக் கூறுதற்கு அப்புராணவுரைகள் முகமனுரைகளாய் எழுந்தன வல்லது, அவனத அருளறிவியக்கத்தால் தூய அருந்தவத்தோர் மாட்டுப் பிறப்பிக்கப்படுஞ் சிறப்பியல்பு பற்றி அவை அங்ஙனங் கூறுவவாயினவென்று கொள்ளற்க.

ங்ஙனங் கொள்ளாக்கால், சூதன் வேதவியாதன் முதலாயினார் இயற்றிய புராணங் களையும், போதாயனன் யாஸ்கன் பாணினி முதலாயினர் இயற்றிய கல்பம் நிருத்தம் வியாகரணம் முதலிய நூல்களையும் வேள்விப்பயனே எல்லாந் தருமாதலிற் கடவுளென் றொருபொருள் வேண்டப்படா ா தன்று நாட்டிச் சைமினி செய்த மீமாஞ்சை நூலையும் அகப்படுத்துப் பதிணென் விச்சைகளையும் முதலிற் செய்தோன் சிவபிரானே எனக்கூறும் வாயுவங்கிதையுரையும் "வேதமும் வேள்வியும் ஆயினார்க்கு மெய்ம்மையும் பொய்ம்மையும் ஆயினார்க்கு" எனவும், "வேதமுடன் ஆறங்கம் ஆயினான் காண்” எனவும் வருந்த தமிழ்மறைப் பாட்டுகளும் பொருட் பேறிலவாய் ஒழியும். ஆகலின், எங்கும் நிறைந்து நின்று எவற்றையும் இயக்கும் இறைவனது பொதுவியல்புபற்றிக் கூறும்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_25.pdf/365&oldid=1589808" இலிருந்து மீள்விக்கப்பட்டது