உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 25.pdf/366

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருவாசக விரிவுரை

333

இன்னோரன்னவை யெல்லாம் முகமனுரைகளே யாவதல்லது பிறவாகா வென்பது தெற்றென விளங்குவதால், தூயரான அருந்தவத்தோர்பால் முனைத்து நிற்குஞ் சிறப்பியல்புபற்றி முதல்வன் தனது அருளறிவியக்கத்தால் அவர்பானின்றுந் தோற்றுவிக்குந் தமிழ் மறைகள் அவ்வாரிய நூல்களோடு ஒப்பவைத் தெண்ணப்படுஞ் சிறுமையுடைய வாகாது அவற்றினூங்கு வரம்பிகந்த பெருமை யுடையவாய், அம் முதல்வன் அருளிய உண்மைத் திருமொழி களாயே நிலை பெறுமென்று ஓர்ந்து கொள்க.

தனானும், ஆரிய வேதங்கள் மூத்துவிளியும் மக்களால் இயற்றப்பட்டுத் தம்மையுடைய ஆரியமொழி மூப்புற்று இறந்து பட்டவாறே தாமும் மூத்து விளிந்ததுபோ லாகாமல், மூவா முதல்வனால் மூவா இளமைச் செந்தமிழ் மொழிக்கண் அருளிச் செய்யப்பட்டு அம்மொழி யோடு இன்றுகாறும் உடன்உலவி வராநின்ற செந்தமிழ் நான்மறைகளைக் கூறுதலே தமது திருவுள்ளக்கிடை யென்பது தெரிப்பார் அடிகள் ஈண்டு மூவா என்னும் அடைகொடுத்து மூவா நான்மறை என்று அருளிச் செய்தா ரென்க. இன்னும் இது விரிப்பிற் பெருகும்.

இறைவன் முந்நகர்களை அழிக்கப் புக்க ஞான்று தான் பெறும் வொன்றிக்கு அறிகுறியாகத் தனது ஆனேற்றின் வடிவு நிறைத்து எழுதப்பட்ட தொரு கொடியை உயர எடுப்பித்தா னாகலின் சேவார் வெல்கொடிச் சிவனே என்றார்.

சே - ஆனேறு; எருது. ஆர்தல் நிறைதல்; திவாகரம்.

'வெல்கொடி' வினைத்தொகை. வெல்லுங் கொடி யென விரிக்க; வெல் புரவி பூண்ட விளங்குமணித் திண்டேர் என்புழியும் அதன் உரைகாரர் “பகை வெல்லுங் குதிரை” என்று (புறப்பொருள் வெண்பா மாலை 25) விரித்தல் காண்க.

இறைவன் பொன்னிறம் உடையனாகலின் ‘மின்னார் உருவ' என்றார். அதில் ஆர் என்பது உவமவுருபின் பொருள்பட வந்தது.

விக்ருத‘ என்னும் வடசொல்லினின்றும் பிறந்த விகிர்தன் என்னும் பெயர் விளியேற்று விகிர்தா என ஆயிற்று. விகிர்தம் - வேறுபாடு, அடியார் வேண்டிய வடிவிலெந்தாந் தோன்றுதலிற்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_25.pdf/366&oldid=1589813" இலிருந்து மீள்விக்கப்பட்டது