உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 25.pdf/367

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

334

❖ - 25❖

மறைமலையம் – 25

பல வேறுபாடுடைய உருவுகள் மேற்கொள்வன் என்பார் உருவ விகிர்தா என்றருளிச் செய்தார்; இக் கருத்தே பற்றி,

"ஒருவனே இராவணாதி பாவகம் உற்றாற் போலத் தருவன்இவ் வுருவம் எல்லாந் தன்மையுந் திரியானாகும் வரும்வடி வெல்லாஞ் சத்தி சக்திதான் மரமுங் காழ்ப்பும் இருமையும் போலமன்னிச் சிவத்தினோ டியைந்து நிற்கும்'

என்னுந் திருப்பாட்டும் (சிவஞானசித்தியார் 1.87) எழுந்தது இனி 'விஹ்ருதம்' என்னும் வட சொல்லினடியாகப் பிறந்து விளையாட்டு டையவன் எனப் பொருள்படுமென் றுரைப்பி னுமாம்.

மிக வல்லென்ற கல்லின்கண் நார் உரித்தல் எவர்க்கும் அரிதாகலின் அதனைச் செயவல்லுநர் திறம் பெரிதும் வியக்கற் பாலதாதல் போல, எவ்வகையானும் நெஞ்சம் உருகப் பெறாதார்க்கு அவ்வுருக்கத்தினை வருவிப்பார் திறம் பெரிதும் வியக்கற்பால தென்பார் கன்னார் உரித்த கனியே என்றார். அடிகள் தமது நெஞ்சத்தினை இறைவன் அன்பாற் கனியச் செய்த அருட்பெருந் தகைமையின் நிறத்தைத் தெரிவித்தா ராயிற்று. வல்லென்ற நெஞ்சத்தைக் கனிய வைப்பார் தாமும் அக் கனிதற்றன்மை யுடையராயினல்லது அது செய்த லியலா மையின், அதற்கேற்ற அத்தன்மையினை இறைவன் சாலவும் உடை யனென்பார் கனியே என அச் சொல்லையே உடம்பொடு புணர்த் தோதினார் என்க.

‘கனகக்குன்றே காத்திடுவாயாக நினக்கு வணக்கம்' என நினக்கு என்னும் ஒருசொல் அவாய்நிலையால் வருவித்துரை யுரைத்துக் கொள்க. இங்ஙனமே 'போற்றி' என்பதற்குமுன் வருவிக்க வேண்டும் பெயர்களை ஆங்காங்கு வருவித்துரைத்துக் கொள்க.

கநகம் - வடசொல்

‘ஆ ஆ' என்னும் வியப்பிடைச் சொற்கள் நடுவே வகர உடம்படுமெய் வந்தமையின் ‘அவா' என்றாயின; ஆவா விருவர் அறியா" என்று அடிகள் திருச்சிற்றம்பலக்கோவையாரினும் அருளிச் செய்தமை காண்க.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_25.pdf/367&oldid=1589817" இலிருந்து மீள்விக்கப்பட்டது