உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 25.pdf/368

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

100

105

திருவாசக விரிவுரை

படைப்பாய் காப்பாய் துடைப்பாய் போற்றி இடரைக் களையும் எந்தாய் போற்றி

ஈச போற்றி, இறைவ போற்றி தேசப் பளிங்கின் திரளே போற்றி அரைசே போற்றி அமுதே போற்றி

விரைசேர் சரண விகிர்தா போற்றி வேதி போற்றி விமலா போற்றி ஆதி போற்றி அறிவே போற்றி கதியே போற்றிகனியே போற்றி நதிசேர் செஞ்சடை நம்பா போற்றி

110 உடையாய் போற்றி உணர்வே போற்றி கடையேன் அடிமை கண்டாய் போற்றி

-

-

335

படைப்பாய் காப்பாய் துடைப்பாய் போற்றி எவற்றையும் உண்டாக்குபவனே காப்பவனே அழிப்பவனே நினக்கு வணக்கம், ரைக் களையும் எந்தாய் போற்றி - துன்பத்தை விலக்கும் எம் தலைவனே போற்றி, ஈச போற்றி உடையானே போற்றி, இறைவ போற்றி - எப்பொருளினுந் தங்குவோனே போற்றி, தேசப் பளிங்கின் திரளே போற்றி ஒளி பொருந்திய பளிங்கின் தொகையை ஒத்தவனே போற்றி, அரைசே போற்றி அரசனே - போற்றி, அமுதே போற்றி அமிர்தமே போற்றி, விரைசேர் சரண விகிர்தா போற்றி - மனம் பொருந்திய திருவடிகள் வாய்ந்த விளையாட்டுடையவனே போற்றி, வேதி போற்றி, - புலவனே போற்றி, விமலா போற்றி மாசற்றவனே போற்றி, ஆதி போற்றி எப்பொருட்கும் முதலே போற்றி அறிவே போற்றி, கனியே போற்றி பழமே போற்றி, நதி சேர் செம்சடை நம்பா போற்றி - கங்கையாறு சேர்ந்த சிவந்த சடையினையுடைய சிவபெருமானே போற்றி, உடையாய் போற்றி - எப்பொருள்களையும் உடை யானே போற்றி, உணர்வே போற்றி - மெய்யுணர்வே போற்றி, கடையேன் அடிமை கண்டாய் போற்றி கடைப்பட்டவனாகிய என்னையும் ஓர் அடியவனாகக் கொள்ளக் கடைக்கணித்தவனே போற்றி என்றவாறு.

-

-

-

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_25.pdf/368&oldid=1589822" இலிருந்து மீள்விக்கப்பட்டது