உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 25.pdf/369

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

336

  • மறைமலையம் - 25

துடைத்தல் - அழித்தல்; இப்பொருட்டாதல் “தோற்று வித்தளித்துப் பின்னுந் துடைத்தருள் தொழில்கள் மூன்றும், போற்றவே யுடையன் ஈசன்” என்னுஞ் சிவஞான சித்தியார் திருப்பாட்டினுங் காண்க.

‘ஈசன்' என்னும் வடசொல் எப்பொருளையும் உடை யோன் அல்லது ஆள்வோம் என்னும் பொருட்டு.

'இறைவன்' என்பதற்கு ‘எப்பொருளினுந் தங்குகின்றவன்' எனப்பொருள் உரைப்பர் அடியார்க்கு நல்லார். (சிலப்பதிகாரம்

10. 184)

தேசம் - ஒளி; தேஜஸ் என்னும் வடசொற்றிரிவு.

திரள் - தொகை, தொகுதி; திவாகரம்

6

‘அரைசு' என்பது அரசு என்னுஞ் சொல்லின் போலி. ‘சரணம்’ வடசொல்.

வேதி என்பது புலவன் எனப் பொருள்படும் வடசொல்.

'நதி சேர் செஞ்சடை நம்பன்' என்பது பகீரத முனிவன் வேண்டச் செருக்கோடும் விரைந்து இழிந்த கங்கையை இறைவன் தன் சடைக்கண் அடக்கி அதற்கு அச்செருக்கினைப் போக்கினமை தெரித்தற்கு வந்தது; பகீரதன்பொருட்டு இறைவன் இங்ஙனங் கங்கையைச் சடையில் ஏற்ற வரலாறு வடமொழி வான்மீகி இராமாயணத்தின நாற்பத்திரண்டாம் பகுதியிற் சொல்லப்பட்டது. இதன் உண்மைப் பொருள்: இறைவனது திருமுடி வானமாகவும், அவனது செஞ்சடை செக்கர் வானத்திற் றோன்றும் முகிற் படலமாகவும், அச்சடைக் கண் உள்ள கங்கை அம்முகிற் படலத்துள்ள நீராவியாகவும் உருவக வகையாற் கூறப்பட்டதேயாம் என்க.

‘நம்பன்' என்பது சிவபெருமான் பெயர்களுள் ஒன்றாகத் வாகரம் கூறும்; நம்பி என்னுஞ் சொற்போல உயர்வுப் பொருளைத் தரும். இனி, 'நம்பும் மேவும் நசையா கும்மே' என்று தொல்காப்பியம் சொல் 329) ஆசிரியர் தொல்காப்பியனார் ஓதினமையின் ‘எவ்வுயிரும் விரும்புதற்குரியோன்' எனப் பொருள் கோடலும் ஒன்று.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_25.pdf/369&oldid=1589827" இலிருந்து மீள்விக்கப்பட்டது