உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 25.pdf/370

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருவாசக விரிவுரை

ஐயா போற்றி அணுவே போற்றி சைவா போற்றி தலைவா போற்றி

குறியே போற்றி குணமே போற்றி 115 நெறியே போற்றி நினைவே போற்றி வானோர்க் கரிய மருந்தே போற்றி ஏனோர்க் கரிய மருந்தே போற்றி மூவேழ் சுற்றம் முரண்உறு நரகிடை ஆழாமே அருள் அரசே போற்றி

120 தோழா போற்றி துணைவா போற்றி வாழ்வே போற்றிஎன் வைப்பே போற்றி முத்தா போற்றி முதல்வா போற்றி அத்தா போற்றி அரனே போற்றி உரையுணர் விறந்த ஒருவ போற்றி

125 விரிகடல் உலகின் விளைவே போற்றி அருமையில் எளிய அழகே போற்றி கருமுகில் ஆகிய கண்ணே போற்றி மன்னிய திருவருண் மலையே போற்றி என்னையும் ஒருவன் ஆக்கி இருங்கழல்

130

சென்னியில் வைத்த சேவக போற்றி

-

337

-

ஐயா போற்றி - ஐயனே போற்றி, அணுவே போற்றி - துகள் போல் நு.ண்ணியனே போற்றி, சைவா போற்றி சைவனே போற்றி, தலைபோற்றி - எவ்வுயிர்க்குந் தலைவனே போற்றி, - எண்பெருங் குணங்களுடையவனே போற்றி, நெறியே போற்றி - இன்ப வழியே போற்றி, நினைவே போற்றி - என்றும் ஒரு தன்மைத்தான் நினைவுடையவனே போற்றி, வானோர்க்கு அரிய மருந்தே போற்றி - அன்பரல்லாத தேவர்களும் பெறுதற்கரிய மருந்தே போற்றி, ஏனோர்க்கு எளிய இறைவா போற்றி - அன்பரான மக்களும் பெறுதற்கு எளியனாய் நிற்கும் இறைவனே போற்றி, மூ ஏழ் சுற்றம் முரண் உறு நரகு இடை ஆழாமே அருள் அரசே போற்றி - இருபத்தொரு தலைமுறையாக வரும் அடியாராகிய கற்றத்தவர் ஒன்றோடொன்று மாறுபட்ட

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_25.pdf/370&oldid=1589832" இலிருந்து மீள்விக்கப்பட்டது