உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 25.pdf/371

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

338

மறைமலையம் - 25

நரகங்களிற் சென்று ஆழ்ந்து போகாதபடி அருள்புரியும் மன்னனே போற்றி, தோழா போற்றி மெய்யன்பர்க்கு நண்பனே போற்றி, துணைவா போற்றி - அவர்க்குத் துணைவனே போற்றி, வாழ்வே போற்றி - அன்பர்தம் இன்ப வாழ்க்கையே போற்றி.

-

-

என் வைப்பே போற்றி எனது புதை பொருளே போற்றி, முத்தா போற்றி - இயல்பாகவே பாசங்களில் நீங்கினவனே போற்றி, முதல்வா போற்றி - எல்லாவற்றிற்கும் முதலாய் நிற்பவனே போற்றி, அத்தா போற்றி எவ்வுயிரையும் ஈன்றோனே போற்றி, அரனே போற்றி - தீவினைகளை நீக்குபவனே போற்றி, உரை உணர்வு இறந்த ஒருவ போற்றி சொல் அளவினையும் உணர்ச்சி யளவினையுங் கடந்த ஒருவனே போற்றி, விரிகடல் உலகின் விளைவே போற்றி - விரிந்த கடல் சூழ்ந்த உலகத்தின் பயனே போற்றி, அருமையில் எளிய அழகே போற்றி - அன்பர் அல்லாதார்க்கு அருமையாய் இருந்தே அன்பர்க்கு எளியனாய் விளங்கும் அழகனே போற்றி, கருமுகில் ஆகிய கண்ணே போற்றி - கரிய மழைபோல் அருளைப் பெய்யும் கண்போற் சிறந்தானே போற்றி, மன்னிய திரு அருள் மலையே போற்றி, நிலைபெற்ற அழகிய அருளையுடை மலையே போற்றி, என்னையும் ஒருவன் ஆக்கி இருங்கழல் சென்னியில் வைத்த சேவக போற்றி ஒன்றுக்கும் பற்றாத எளியேனையும் எவ்வாற்றானுஞ் சிறந்த அடியாருள் ஒருவனாகச் செய்து பெருமை தங்கிய திருவடிகளை என் புன்தலைமேல் வைத்த வீரனே போற்றி என்றவாறு.

இறைவற்குச் சைவன் என்னும் பயர் போந்த வரலாற்றினை மேலே கீர்த்தித் திருவகவலில் ‘ஐயாறதனிற் சைவனாகியும் என்பதற் குரை விரித்தவழி எடுத்துக் காட்டினாம்; ஆண்டுக் காண்க.

-

குறியாவது அனற் பிழம்பின் வடிவு; அதன்கண் இறைவன் முனைத்து விளங்குமாற்றினை மேலே விரித்துக் காட்டினாம். அவ்வனற்பிழம்பு போற் செய் தமைக்கப்படுங் கல்வடிவும் இறைவற்குக் குறியாயிற்று. குறி, அடையாளம் இலிங்கம் என்பன ஒரு பொருட் கிளவிகள்.

'குணம்' ஈண்டு எண் குணங்களின் மேற்று; அவை: தன் வயத்தனாதல், தூயவுடம்பினனாதல், இயற்கையுணர்வின னாதல் முற்றுமுணர்தல், இயல்பாகவே, பாசங்களி னீங்குதல்,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_25.pdf/371&oldid=1589836" இலிருந்து மீள்விக்கப்பட்டது