உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 25.pdf/372

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருவாசக விரிவுரை

339

பேரருளுடைமை, முடிவிலாற்ற லுடைமை, வரம்பிலின்ப முடைமை என வினவ.

இறைவனனப் பற்றினாலன்றிப் பேரின்பந் தலைப்படுதல் ஏலாமையின், அவனை அதற்குச் செலுத்தும் நெறியாகக் கூறினார்.ஏனை யுலகத்துப் பொருள்களும் உயிர்களும் எல்லாம் அதன்கட் செலுத்த மாட்டாமையின் அவை அதற்கு நெறி யாகாவாயின.

எல்லாம் வல்ல இறைவன் மூவா மருந்தா யிருத்தல் ஓர்ந்து அவனை யடைந்து இறப்பினை நீக்கிக்கொள்ளமாட்டாது, பாற்கடலின் மருந்தை நாடிச் சென்று இடருற்றனராகலின் வானோர்க்கரிய மருந்தே என்றருளிச் செய்தார்.

குறி, குணம், நெறி, நினைவு, மருந்து முதலிய சொற்களும் இவைபோற் பின் வருவனவுமெல்லாம் ஆகுபெயரால் வனையே உணர்த்தும்.

றை

"மூவேழ் இருபத்தொரு தலைமுறையும் வாழ்க” என்று வாழ்த்துரை கிளக்கும் உலகியல் வழக்குப்பற்றி, அடியார் சுற்றமும் இருபத்தொரு தலைமுறை வரையில் நரகத்திற் சென்று ஆழாமற்காப்பான் என்றார். பேரன்பிற் சிறந்த ஓர் அடியவரின் இயல்பு அவர் கால்வழியில் வருவோர்க் கெல்லாம் இருபத் தொரு தலைமுறை வரையிற் றொடர்ந்துவரும் என்ப வாகலின் அவரை யெல்லாம் இறைவன் உயர்நிலைக்கண் வைப்பனென் பது குறித்தாராயிற்று.

தங்கட்பட்ட உயிர்களை வருந்துந் தன்மையில் ஒரு நரகின் இயல்பு மற்றொரு நரகின் இயல்பின் வேறா யிருத்தலின் முரண் உறு நரகு என்றார்.

தன்பால் அன்புமிக்க அடியாரைத் தன்னோ டொப்ப வைத்து நலம் பாராட்டுதலின் இறைவனைத் 'தோழ' என்றும், அவர்க்கு எந் நிலையினும் எக் காலத்தினும் நீங்காத் துணையா யிருத்தலின் ‘துணைவா' என்றும் அருளிச் செய்தார்.

முத்தன்' என்பது விடுபட்டவன் எனப் பொருள்படும் முக்த : என்னும் வடசொற் றிரிபு. இறைவன் தன்னியற்கை யிலேயே மும்மலப் பற்றின் நீங்கினவனாய் இருத்தலின் அவனையும் ‘முத்தன்' என்றார்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_25.pdf/372&oldid=1589841" இலிருந்து மீள்விக்கப்பட்டது