உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 25.pdf/373

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

340

மறைமலையம் - 25

அரன்' என்னும் பெயர் அடியார் வினைகளை அரித்தல் அல்லது அராவுதல் பற்றி வந்தது.தமிழிலிருந்து வடமொழிக்கட் சென்ற சொற்களுள் இதுவும் ஒன்று.

உயிர்கள் உடம்புகளிற் புகுந்து உலகின்கட் டோன்றி அறிவுடையராய் அவ் வுலகத்துப் பொருளமைப்புகளைக் காண் L றும் அவற்றை அமைத்த முதல்வனது அருட்பெருந் தகைமையினையும் அவனிருப்பினையும் அறியப் பெறுத லானும், இவ்வாறாகிய உலக வாழ்க்கையின் முடிந்த பயனாக இறைவனை அடையப் பெறுதலானும் விரிகடல் உலகின் விளைவே என்றருளிச் செய்தார்.

மழையைப் பொழியும் முகிலும், பொழிந்த அம் மழையருவியைத் தாங்கும் மலையும்போல அருண்மழையைச் சொரியும் முகிலும் அம்மழையாலாய அருளருவியைத் தாங்கும் மலையும் இறைவனே என்பார். 'கருமுகிலாகிய கண்ணே' என்றும் ‘மன்னிய திருவருண் மலையே' என்றும் அருளிச் செய்தார்.

66

'இருங்கழல்' என்பதில் இருமை பெருமை எனப் பொருள் படுதலை அகல் இரு விகம்பினானும்” என்புழியுங் (புறநானூறு 8) காண்க.

‘கழல்' என்பது காலின் அடிக்கும், ஆடவர் காலணிக்கும் பெயராய் வருதல் திவாகரத்திற் காண்க.

66

சென்னி

தலை; இச்சொல் இப்பொருட்

இறைஞ்சுக பெரும நின் சென்னி” என்னும் புறப்பாட்டடியிற் (புறநானூறு 6) காண்க.

சேவகன் - வீரன்; “சேவகம்” வீரம் எனப் பொருள் படுத

லைச் சூடாமணி நிகண்டிற் காண்க.

தொழுதகை துன்பந் துடைப்பாய் போற்றி

அழிவிலா ஆனந்த வாரி போற்றி

அழிவதும் ஆவதுங் கடந்தாய் போற்றி

முழுவதும் இறந்த முதல்வா போற்றி

135 மானேர் நோக்கி மணாளா போற்றி வானகத் தமரத் தாயே போற்றி

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_25.pdf/373&oldid=1589846" இலிருந்து மீள்விக்கப்பட்டது