உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 25.pdf/374

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருவாசக விரிவுரை

பாரிடை ஐந்தாய்ப் பரந்தாய் போற்றி நீரிடை நான்காய் நிகழ்ந்தாய் போற்றி தீயிடை மூன்றாய்த் திகழ்ந்தாய் போற்றி

140 வளியிடை இரண்டாய் மகிழ்ந்தாய் போற்றி வெளியிடை ஒன்றாய் விளைந்தாய் போற்றி அளிபவர் உள்ளத் தமுதே போற்றி கனவிலுந் தேவர்க் கரியாய் போற்றி

நனவிலும் நாயேற் கருளினை போற்றி

341

தொழுதகை துன்பம் துடைப்பாய் போற்றி - கும்பிட்ட கையினை யுடையார்கக்கு வருந் துன்பங்களை அகற்றுவோனே போற்றி, அழிவிலா ஆனந்த வாரி போற்றி - கெடுதலில்லாத இன்பக்கடலே போற்றி, அழிவதும் ஆவதும் கடந்தாய் போற்றி கேடும் ஆக்கமுங் கடந்தவனே போற்றி, முழுவதும் இறந்த முதல்வா போற்றி - எல்லாவற்றையுங் கடந்த முதல்வனே போற்றி, மான் நேர் நோக்கி மணாளா போற்றி - மானையொத்த பார்வையினையுடைய அம்மைக்கு மணவாளனே போற்றி, வானகத்து அமரர் தாயே போற்றி - வானிடத்திலுள்ள தேவர்க் குத் தாயை யொத்தவனே போற்றி, பார் இடை ஐந்தாய்ப் பரந்தாய் போற்றி - நிலத்தினிடத்தே ஐந்து தன்மைகளாய் விரிந்தவனே போற்றி, நீர் இடை நான்காய் நிகழ்ந்தாய் போற்றி - நீரினிடத்தே நான்கு தன்மைகளாய் விளங்கினவனே போற்றி, தீ இடை டை மூன்றாய்த் திகழ்ந்தாய் போற்றி - நெருப்பினிடத்தே மூன்று தன்மைகளாய் மிக்கு நின்றவனே போற்றி, வளியிடை இரண்டாய் மகிழ்ந்தாய் போற்றி - காற்றினிடத்தே இரண்டு தன்மைகளாய் மகிழ்ந்து நின்றவனே போற்றி, வெளியிடை விசும்பினிடத்தே ஒரு ஒன்றாய் விளைந்தாய் போற்றி தன்மையாக விளைந்தவனே போற்றி, அளிபவர் உள்ளத்து அமுதே போற்றி - அன்பால் உருகுபவரது உள்ளத்தின்கண் ஊறும் அமுதமே போற்றி, கனவிலும் தேவர்க்கு அரியாய் போற்றி - கனவிடத்தும் அன்பரல்லாத தேவர்கட்கு அரியனாய் உள்ளவனே போற்றி, நனவிலும் நாயேற்கு அருளினை போற்றி - நனவிடத்தும் நாயின் இழிந்த அடியேனுக்கு அருள்செய்தவனே போற்றி என்றவாறு.

-

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_25.pdf/374&oldid=1589850" இலிருந்து மீள்விக்கப்பட்டது