உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 25.pdf/375

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

342

  • மறைமலையம் - 25

துன்புறுவார் அத்துன்பத்தை நீக்கவல்லார்பாற் சென்று கைதொழுது நின்று தம் குறை யறிவிப்பராகலின், தொழு வார்க்குள்ள துன்பத்தை அதற்கடையாளமாக எடுத்த கைம் மேல் ஏற்றித் 'தொழுத கை துன்பம் என்றருளிச் செய்தார்.

-

தொழுதல் கும்பிடுதல், பிங்கலந்தை. “தொழுதகை யுள்ளும் படையொடுங்கும்" (திருக்குறள் 828) என்றார்* ஆசிரியர் திருவள்ளுவ நாயனாரும்.

ஊழிக்காலத்திற் கடல் நீரும் வற்றி இல்லையாமாகலின் எக்காலத்துந் திரிபில்லாத இன்பநிைைலயான இறைவனை அழிவிலா ஆனந்த வாரி” என்றார்.

வாரி - கடல்நீர்; திவாகரம்; நீர் ஈண்டுக் கடல் மேலானது ஆகுபெயர்.

கேடும் ஆக்கமும் உள்ள பொருள்களினுஞ் சிற்றுயிர் களினும் அப்பாற்பட்டவனாதல் போலவே, கேடும் ஆக்கமும் இல்லாத் தூய விந்து தத்துவத்திற்கும் அத்தத்துவத்தில் வைகு வாரான கடவுளருக்கும் அப்பாற்பட்டவன் இறைவனென்று ணர்த்துவார் 'முழுவதும் இறந்த முதல்வா' என்றருளிச் செய்தார்.

66

-

இறத்தல் கடத்தல்; பிங்கலந்தை.

மடவார் நோக்கத்திற்கு மானையே உவமை கூறுவர். ‘அவர் நம், மானேர் நோக்கம் மறப்பார் அல்லர்” என்றருளிச் செய்தார் இளங்கோவடிகளும்*.(சிலப்பதிகாரம் கானல் வரி 44) மான்போற்றுதள்ளுதலின் மடவார் கண்களாகிய சினைக்கு மான் என்னும் முதல் உவமை யாயிற்று. இவ்வாறு முதலுஞ் சினையும் ஒப்புறுத்தப்படுதல் “முதலுஞ் சினையுமென் றாயிரு பொருட்கும், நுதலியமரபின் உரியவை உரிய” என்று ஆசிரியர் (தொல்காப்பியம் உவமயியல் 6) தொல்காப்பியனார் கூறிய வாற்றானறிக.

‘மண ஆளன்' எனுஞ் சொற்றொடர் ‘மணாளன்” என மருவிற்று. “குளவாம்பல், மரவடி, ‘மராடி' என மரீ இயினாற் போல்”*. மணவாளன் (சிவஞானபோதமாபாடியம் 2ஆம் சூத்திரம் 3ஆம் அதிகரணம்) - கணவன்; பிங்கலந்தை.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_25.pdf/375&oldid=1589855" இலிருந்து மீள்விக்கப்பட்டது