உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 25.pdf/40

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருவாசக விரிவுரை

7

மேலும், திருவாசகத் தேன் உலகத்துத் தேன் போலாது, பிற வற்றால் நீக்கலாகாத பிறவிப் பிணியை நீக்கி அறியாமையைத் தொலைக்க வல்லதாகலின் அம்மேம்பாடு புலப்படுதற் பொருட்டு அவ்வினை கொடுத்துக் கூறினாரெனலும் ஆம்.

அல்லல்' ஆகுபெயரால் துன்பத்தைத் தரும் அறியாமை மேலதாயிற்று.

னித் ‘திருவாசகம்' என்பது 'பிறிதொன்றற் கில்லாத அழகினை உடைய வாசகம்' என்னும் பொருட்டாம். “திரு வென்பது கண்டாரால் விரும்பப்படுந் தன்மைநோக்கம், என்றது அழகு” எனப் பேராசிரியர் திருச்சிற்றம்பலக் கோவையாரு ரையுள் உரைத்ததூஉங் காண்க. பிறிதொன்றற்கில்லாத சிறப் பினை யுடையது இத்திருவாசகம் என்பது அதனாற் பெற்றாம். ‘வாசகம்’ என்பது சொல் என்னும் பொருட்டாதல் “மண்டில மே பணியாய் தமியேற் கொருவாசகமே" என்னுந் திருச்சிற்றம் பலக்கோவையார் உரையிற் காண்க. ‘திருவாசகம்' வேற்றுமைத் தொகைப் புறத்துப் பிறந்த அன்மொழித் தொகை; இதனை ஆகுபெயர் என்பாருமுளர்; ஆயினும், உண்மையான் நோக்கு வார்க்கு இஃது அன்மொழித் தொகையே யாவதல்லது ஆகுபெயராகாமை யுணர்க என்று ஆசிரியர் சிவஞான யோகிகள் கூறுதலின் ஈண்டுக் கூறியதே பொருத்தமாமென்க.

இனித் திருவாசகம் என்பதில் அடைமொழியாய் நின்ற திருவென்னுஞ் சொல் கண்டாரால் விரும்பப்படுந் தன்மை நோக்கமாகிய அழகினை உணர்த்தவே, பேரின்பப் பேற்றைக் காதலிப்பாரெல்லாராலும் விரும்பப்படும் அழகினை உடைத்து இவ்வாசகம் என்பது பெற்றாம். எல்லாரும் ஒன்றை விரும்புதல் அது பிறிதொன்றற் கில்லாத அழகினை உடைமையினா லேயாம். தன்னைக் கற்பார் உள்ளத்தை உருகச் செய்து அவரை பேரின்பப் பெருக்கின்கண் ஆழ்த்துதற்கட் பிறிது எந்நூலுக்கும் இல்லாத அழகினை இத்திருவாசக நூல் உடைமையால், தனினும் மேலான அழகினைப் பெற்ற வேறொருநூல் இல்லை யென்பது தேற்றமாம். அன்பு பொதிந்த இதன் செய்யுட்களை ஓதுந்தோறும் நினைக்குந்தோறும் நெஞ்சம் நெக்குருகக் கண்ணீர் பெருக நாவுரை குழற மெய்ம்மயிர் சிலிர்ப்பப் பேரின்ப வெள்ளங் கிளர்ந்து எழுதல் யாவர் மாட்டுங் காணப்படுத

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_25.pdf/40&oldid=1589174" இலிருந்து மீள்விக்கப்பட்டது