உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 25.pdf/41

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

8

❖ 25❖ மறைமலையம் - 25

லானும், தொடர்புபட்டு நிகழும் இத்தகைய பேரின்ப நிகழ்ச்சி மற்றை நூல்களை ஓதுவார் நினைப்பாரிடத்துக் காணப்படா மையானும் இத்திருவாசகம் ஒன்றே ஏனைநூல்களுக்கில்லாத அ அழகினை உடைத்தென்பது தெளியப்படும். ஆரியர்க்குள் வழங்கும் நான்மறைகளும் அவரால் மிக உயர்ந்தனவாகக் கருதப்படினும். நடுநிலை திறம்பாத நல்லிசைப் புலவர் ஒருவர் அவ்வாரிய நான்மறைகளையும், இத்தமிழ் மறையினையும் பொருடெரிந்து ஓதிக் காண்பாராயின் இத்திருவாசகம் அந்நான்மறையினுங் காணப்படாத பேரழகினையுடைத்தெனத் தற்றென உணர்வர். இத்திருவாசகத் தமிழ் மறையினை டையறாது ஓதி அதன் பொருளை எந்நேரமும் நினைந்து கழிபேரின்பத்திற் றிளைத்திருப்பார்க்கு மலக்கறை தானே தேய்ந்து போக, இறைவன் றிருவருட்பேறு எளிதில் வந்தெய்து மென்க.

'எல்லை மருவா நெறி அளிக்கும்' என்பதற்குப் ‘பிறவி யெல்லையைச் சேராத வீட்டு நெறியைத் தரும்' என்று பொருள் கூறுவாருமுளர். இதற்கு இதற்கு இங்ஙனம் இங்ஙனம் பொருளுரைத்துத், 'தொல்லை யிரும்பிறவிச் சூழுந் தளைநீக்கி' என்னும் அடிக்கும் அப்பொருளே யுரைத்தல் சிறப்பன்மையானும், அது கூறியது கூறலா மாகலானும் அது பொருந்தாதென விடுக்க. முடிவு படாத இன்பத்தினையுடைய தாகலின் வீட்டுநெறியை ‘எல்லை மருவா நெறி' என்றார்.எல்லாவற்றிற்கும் முடிந்த நிலையாயுள்ள வீட்டினை அவ்வியல்பு புலப்படத் 'துறை' எனக் கூறுதலே பொருத்தமாம்; அவ்வாறன்றி நீளச்செல்லும் வழியாக அதனை உருவகப்படுத்திய தென்னை யெனின்; "புனர்ந்தாந் புணருந் தொறும் பெரும்போகம்" என்று அடிகள் திருச்சிற்றம்பலக் கோவையாரில் அருளிச் செய்தாங்கு, வீட்டின்பந் துய்க்குந்தோறுந் துய்க்குந்தோறும் முடிவு காணப்படாது நீளும் இயல்பிற்றாகலின் அதுபற்றி யதனை 'நெறி' எனக் கூறினார்.

சிறப்புப்பாயிரம்

முற்றும்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_25.pdf/41&oldid=1589176" இலிருந்து மீள்விக்கப்பட்டது