உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 25.pdf/42

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

9

திருச்சிற்றம்பலம்

மாணிக்கவாசக சுவாமிகள்

அருளிச்செய்த

திருவாசகமும் அதற்கு விரிவுரையும்

முதலாவது அகவல்

சிவ புராணம்

(சிவனது அநாதி முறைமையான பழமை) திருப்பெருந்துறையில் அருளிச் செய்யப்பட்டது

(குறிப்புரை)

'சிவ புராணம்' என்னுஞ் சொற்றொடர் 'சிவனது பழமை’ என்னும் பொருளை உணர்த்தும்: இச்சொற்றொடர்ப் பொருளை இதன்கீழ் நின்ற ‘சிவனது அநாதி முறைமையான பழமை' என்று பழைய சான்றோர் எவரோ விரித்துக் கூறிய சொற்றொடர் இனிது விளக்குகின்றது. வடமொழியிற் 'புராணம்' என்னுஞ் சொற் ‘பழைய நிகழ்ச்சி' என்று பொருள் படுமாகலின் அப்பொருளில் அஃது இங்கு வைக்கப் படுவதாயிற்று. இனிப் பழைய வரலாறுகளை எடுத்துக் கூறும் நூல்கட்கும் புராணம் என்னுஞ் சொல் வழங்கப்படுதல் காண்க.

LO

5

நமச்சிவாய வாழ்க! நாதன்றாள் வாழ்க!

இமைப்பொழுதும் என்நெஞ்சில் நீங்காதான் றாள்வாழ்க! கோகழி ஆண்ட குருமணிதன் றாள்வாழ்க! ஆகமம் ஆகிநின் றண்ணிப்பான் றாள்வாழ்க!

ஏகன் அநேகன் இறைவன் அடிவாழ்க!

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_25.pdf/42&oldid=1589179" இலிருந்து மீள்விக்கப்பட்டது