உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 25.pdf/43

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

10

மறைமலையம் 25

(உரை) ‘நமச்சிவாய' என்னுஞ் சொற்றொடர் வட மொழியில் நமஸ்சிவாய என நின்று ‘சிவனுக்கு வணக்கம்’ என்னும் பொருளைத் தரும். சிவன் என்னுஞ் சொல் வ மொழியில் சிவ: என நின்று நான்காம் வேற்றுமை உருபாகிய ய என்பதனை ஏற்குங்கால் இடையிலுள்ள சிர்க்கங் கெட வகரம் வாகாரமாக நீண்டு சிவாய என்று ஆய்ச் சிவனுக்கு எனப் பொருள்படும். நமஸ் என்பது வணக்கம் எனப் பொருடரு வதொரு வடசொல்; இச்சொல் முதல்நின்று நமச்சிவாய எனப் புணருங்கால் ஈற்றில் நின்ற ஸகரம் வருமொழி முதல்நின்ற சகரத்தோடொப்பத் திரியும்; சிவாயநம: எனப் புணர்ந்து ஈற்றில் நிற்குங்கால் அதன் கடை எழுத்தாகிய ஸகரம் விசர்க்கமாகத் திரியும். இச்சொற்புணர்ச்சிக் கட்படும் இவ்வேறுபாடுகள் வடமொழி இலக்கணங்களுட் கண்டுகொள்க.

இனிச் சிவன் என்னுஞ் சொல் எல்லாம் வல்ல ஆண்ட வனை உணர்த்த, நமஸ் என அதனோடியைந்த மற்றைச்சொல் அவ்வாண்டவனுக்கு அடிமைத்திறம் பேணும் உயிரினைக் குறிப்பால் அறிவுறுத்தி நிற்கின்றது. என்னை! ஆண்டவனுக்கு வணக்கத்தைச் செலுத்துதற்கு உரியது உயிரேயாமென்பது வெளிப்படையாய் நிற்கவைத்து 'அஹம் சிவம் நமாமி' (நான் சிவனை வணங்குகின்றேன்) என்று உரையாமல், வணங்கும் உயிரை உணர்த்தும் ‘அஹம்' (நான்) என்னுஞ் சொல்லையும், அதுகொண்டு முடியும் ‘நமாமி' (வணங்குகின்றேன்) என்னுஞ் சொல்லையும் விடுத்து, வறிதேநமச்சிவாய (சிவனுக்கு வணக்கம்) என இரு சொற்களை மட்டும் புணர்த்த ஒரு சொற்றொடரைப் பெருஞ் சிறப்புடைய மந்திர முதல்வனிடத்துப் பேரின்பத்தைப் பெற விரும்பி அவனை அணுகினாற்கு யான் எனது என்னும் இருவகைச் செருக்கும் அற்று அவனது தலைமைக்கீழ் அடங்கி நிற்க வேண்டுவதி ன்றியமையாததாகும். அதுபோல வெனின், ஒரு பொருள் பணிவுடன் ஒழுகி அது பெறுதல்போல என்பது.

அவ்வாறன்றி, ஒன்றுமில்லாதார் எல்லாம் உடையார் போற் றம்மைப் பிழைபட பெறாது பெரிதுந் துன்புறுதல் போலப், பேரின்பச் செல்வம் இல்லா வறியரான சிற்றுயிர்கள் அச் செல்வம் முழுதும் உடைய முதல்வனைப் பெரிதாகக் கருதாமற் றம்மைத்தாமே மேலாக நினைந்து செருக்குவராயின் முடிவு படாத் துன்பத்திலேயே கிடந்து உழல்வர். மற்று

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_25.pdf/43&oldid=1589180" இலிருந்து மீள்விக்கப்பட்டது