உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 25.pdf/44

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருவாசக விரிவுரை

11

அச்செருக்கு அறுத்துத் தம்மை ஒரு பொருளாக நினையாமல் தந்தலை வனையே பொருளாக நினைந்து வழிபடுவார்க்குப் பேரின்பப் பேறு வருவது திண்ணமேயாம். எனவே, 'நான் சிவனை வணங்குகிறேன்' என்று மந்திரமொழி வகுத்து வைப்பின், அதன்கண் ‘நான்' என்பது முனைத்து நின்று எல்லா ஆற்றலும் எல்லா அறிவும் உடைய முதல்வற்கு முன் தன்னை ஒரு பொருளாகப் பெரிதெண்ணிய குற்றம் உண்டாகி, அதனால் அறியாமையும் உடன் கிளைத்துப் பேரின்பப்பேற்றை அடையாவாறு தடைசெய்தலேயன்றிச் சொல்லுக்கடங்காத் துன்பத்தையுந் தருமாகலின் அங்ஙனஞ் செய்துவைத்தல் வழுவாய் முடியும். அவ்வாறு வழுப்படாமைப் பொருட்டே நான் என்பதனை முற்றும் அடக்கிச் ‘சிவனுக்கு வணக்கம்’ என்பது போதர ‘நமச்சிவாய' என்று மந்திரமொழி வகுத்து வழங்கினாரென்க. இவ்வுண்மை தெரித்தற்பொருட்டே ஆசிரியர் மெய்கண்டதேவநாயனார்,

66

'நான் அவனென் றெண்ணினர்க்கு நாடுமுளம் உண்டாதல் தான்எனஒன் றின்றியே தானதுவாய் - நானெனஒன் றில்லென்று தானே எனுமவரைத் தன் அடிவைத் தில்லென்று தானாம் இறை

என்று சிவஞானபோதத்தின்கண் அருளிச்செய்வா ராயினதூஉ மென்க.

னிச் ‘சிவனுக்கு வணக்கம்' என்னும் மந்திரத்தாற் சிவனை வழிபடுமிடத்து உயிர் தான் ஒருமுதல் அன்றாய்ச் சிவனருளில் அடங்கிநிற்குமாறு யாங்ஙனமெனின்; அதனை ஒரு சிறிது விளக்குதும். கண்ணுங் கதிரவனும் ஒளியுடைப்பொருள் கள் என்பது தேற்றம். அவ்வாறாயினும், நம்மனோர் கண்கள் கதிரவன் ஒளியின் உதவியின்றி எதனையுந் தாமாகவே காணமாட்டா; மற்றுக் கதிரவன் ஒளியோ தானேயும், விளங்கிக் கண்ணொளியையும் விளக்குந்தன்மைத்து. கண் பொருளைக் காணுமிடத்துக் கதிரவனொளியில் ஒன்றுபட்டு நின்று காணும். அங்ஙனங் கதிரவனொளியில் ஒன்றுபட்டு நிற்குங்காற் றானும் ஒளியுடைத்தாம்; கதிரவனொளியில் ஒன்றியைந்து நில்லாது கண் தன்னைத் தனித்துக் காணுமாயின் அது தன்னையுங் காணாது கதிரொளியையுங் காணாது பிற

ஒரு

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_25.pdf/44&oldid=1589181" இலிருந்து மீள்விக்கப்பட்டது