உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 25.pdf/45

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

12

❖ - 25❖ மறைமலையம் – 25

பொருள் களையுங் காணாது; அதுபோல, உயிருஞ் சிவமுமாகிய இரண்டும் அறிவுடைப் பொருள்களேயாயினும், உயிரின் அறிவு அறிவித்தாலன்றியறியாது; சிவத்தினறிவோ தானேயும் அறியும்; உயிரினறிவையும் அறிவிக்கும். ஆதலின் உயிர் தன் அறிவை முதல்வனறிவோடு இயைவித்து அவன் அறிவிக்கு மாறே அறியுமாயின் அது தன்றன்மையினையும் இறைவனியல்பையும் ஏனைப்பொருள்களின்இயல்புகளையும் செவ்வனே உணரப் பெறும். அவ்வாறன்றி, உயிர் தன்னை ஒரு முதலாக நினைந்து முதல்வனறிவை விட்டுப் பிரிந்து தனிநின்றறிய முயலுமாயின், அது தன்னையும் அறியாது, தன் றலைவனையும் அறியாது, ஏ னைப் பொருள்களின் உண்மைத் தன்மையும் அறியாது, அறியாமையே மேற்பட்டு நிற்கும். இவ்வுண்மை பிற்காலத்துச் சான்றோராகிய தாயுமானவ சுவாமிகளாலும்,

66

'அருளால் எவையும் பார்என்றான் அத்தை அறியாதே சுட்டிஎன் அறிவாலே பார்த்தேன் இருளான பொருள்கண்ட தல்லாற் கண்ட

என்னையுங் கண்டிலேன் என்னேடி தோழி"

என நன்கெடுத்துக் காட்டப்பட்டது. எனவே, கதிரொளியிற் கண்ணொளி அடங்கிநின்று விளங்குமாறு போல, உயிரும் இறைவனை வழிபடுங்கால் அவனருளில் அடங்கிநின்று அவ்வருள் வண்ணமாய் விளங்கப்பெறுமென்று கடைப்பிடிக்க. கதிரொளியுங் கண்ணொளியும் ஒருங்கியைந்து பிரிப்பின்றி ஒன்று போல் நிற்பினுங் கதிர் கதிரே, கண் கண்ணே; அதுபோலச் சிவனறிவும் உயிரறிவும் ஒருங்கியைந்து பிரிப்பின்றி நிற்குமாயின், சிவன் சிவனே, உயிர் உயிரே; சிவனருளிற் படிந்து கிடத்தல்பற்றி உயிர் அழிந்துபோமாறில்லை; இஃது து

விளக்கத்திற்போந்த,

“முத்திதனில் மூன்று முதலு மொழியக்கேள்

சுத்தஅநு போகத்தைத் துய்த்தல்அணு - மெத்தவே

இன்பங் கொடுத்தல்இறை இத்தைவிளை வித்தல்மலம்

அன்புடனே கண்டுகொள்அப் பா

உண்மை

என்னும் திருப்பாட்டினாலும் நன்குணரப்படும். ஒரு சாரார் வீடுபேற்றின்பத்தை நுகருங்கால் உயிர் ஒருமுதல் என்றே

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_25.pdf/45&oldid=1589182" இலிருந்து மீள்விக்கப்பட்டது