உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 25.pdf/46

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ய

திருவாசக விரிவுரை

13

கூறுதற்கு ஆகாமல் முற்றும் அழிந்து இல்லாமற்போக, எங்கும் இறைவனே நிற்பனென உரைப்ப: அது பொருந்தாது, பேரின்பம் நுகரப்படு பொருளும், உயிர் அதனை நுகருவதும் ஆகலின், உயிர் முதல் கெட்டு அழிந்தவழிப் பேரின்பம் இருந்தும் அவற்றை உண்பான் இல்லாக்கால் அவை பயன்படுதல் இல்லை யானாற்போல வென்க. அதுவுமேயன்றி, உள்பொருளாகிய உயிர் எவ்வாறு அழிந்து எவ்வாறு இல்லையாப்போம் என்று வினாவுவார்க்கு விடையிறுக்கல் ஆகாமையின் வீடுபேற்றின்கண் உயிரில்லை யென்பார் கூற்று ‘யான் மலடி பெற்ற மகன்' என்பதனோ டொத்துப் பொருளில் கூற்றாய் ஒழியும் என்க. எனவே, நமச்சிவாய என்னும் மந்திரமொழிக்கண் உயிர் தன்னையொரு பொருளாகக் கருதாமற் சிவனையே பொருளாகக் கருதி இருவகைக் செருக்கும் அற்று அவன் திருவடிக்கீழ் அடங்கி நிற்குமாறு தெரிந்துரைக்கப்பட்டது.

னி, நமச்சிவாய எனும் இம்மந்திரத்திற் சிவன் என்னும் மொழி முழுமுதற் கடவுட்குச் சிறந்த பெயராக வைக்கப்பட்டது என்னை யெனின்; உயிர்களெல்லாம் இன்பப்பேற்றினையே விரும்பிநிற்றலானும், அவை தமக்கு அழியா இன்பத்தினைத் தரவல்ல கடவுள் முடிவுபடாப் பேரின்பத்திற்கு நிலைக்களானா யிருந்தாவல்லது அவை அக்கடவுளைப் பற்றுதற்கு அவாவுற மாட்டாவாகலானும், கடவுளின் இன்ப நிலையை இடையறாது நினைவில் எழுப்பும் பெயர்போல அவர்தம் எல்லையற்ற வல்லமையுனையும் அளவுபடா அறிவினையும் உணர்த்தும் பெயர்கள் உயிர்கட்கு மிகப் பயன்படாமையானும் ‘அன்பு வடிவினன்’ ‘இன்ப வடிவினன்' என்னும் பொருளைத் தரும் ‘சிவன்' என்னுஞ் சொல்லே முதல்வனுக்குக் கழிபெருஞ் சிறப்புடைய பெயராக வழங்கப்படுவதாயிற்று. சிவன் என்னும் மொழி இத்துணைச் சிறந்ததாய் இருத்தலினாலன்றே, இருக்கு எசுர் சாமம் எனும் மும்முறையுள் நடுநின்ற எசுர் வேதத்தின் நடுவே விளங்கும் திருவுருத்திரத்தின்கண் “நமச்சிவாய்ச் சிவத ராயச” என நமச்சிவாய என்னும் ஐந்தெழுத் தருமறையும் சிவ என்னும் ஈரெழுத்தொருமொழியுங் காணப்படுவவாயின.

.

அற்றேல், எசுர் வேதத்தினும் மிகப்பழமையதான இருக்கு வேதத்தில் உருத்திரன் என்னும் மொழியே முழுமுதற் கடவுட்குச் சிறந்த பெயராக அடுத்தடுத்து ஓதப்படுவதல்லாமல், சிவம்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_25.pdf/46&oldid=1589184" இலிருந்து மீள்விக்கப்பட்டது