உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 25.pdf/47

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

14

❖ - 25❖ மறைமலையம் – 25

எனுஞ் சொல் அதன்கட் காணப்படாமை என்னையெனின்; ருத்ரன் எனுஞ்சொல் ருத் (துன்பம்) எனவும் த்ராவயதி (ஓட்டுகிறான்) எனவும் பகுக்கப் பட்டுத் ‘துன்பத்தை நீக்குபவன்’ என்று பொருடருதலினாலும், கொள்ளிவட்டமுங் கறங்கும் போல ஓவாது துன்பத்திற் கிடந்துழன்று பெரிதும் வருந்தாநின்ற உயிர்கட்கு முதலில் அவற்றின் துன்பத்தைப் போக்கி யல்லது இன்பத்தைத் தருதல் ஏலாமையினாலும், முதன்மறையாகிய ருக்கின் வாயிலாக முதற்கண் இறைவனை வேண்டலுறும் உயிர்கள் முன்னர்த் தமது துன்பத்தைத் துடைக்கும் பொருட்டே முதல்வனை வழுத்துவராதலினாலும் அவற்றின் துயரைத் தீர்க்கும் நிலையில் நிற்கும் எல்லாம் வல்ல ஆண்டவனை அதற்கேற்ப 'உருத்திரன்' என்று இருக்குமறை பலகாலும் பரவுவதாயிற்று; தமது துன்பம் நீங்கிய அளவிலே பின்னர் அவ்வுயிர்கள் இன்பப்பேற்றை விரும்பி அவ்விறைவனை தொழுவராதலின், அதற்கேற்ப அதற்கடுத்த இரண்டாம் மறையாகிய எசுர்இன்பத்தைத் தருதற்குரிய நிலையில் இன்ப வுருவாய் நிற்கும் முதல்வனைக் குறிக்குஞ் 'சிவன்' எனுஞ் சொல்லை மிக்கெடுத்துக் கூறுவதாயிற்று.

எனவே, முதலாவதான இருக்குமறை துன்பத்தை நீக்கிக் கோடலையே பொருளாகக் கொண்டு அதற்கியைந்த சொல்லால் உருத்திரன் எனவும், இரண்டாவதான எசுர்மறை இன்பப்பேற்றினையே கருத்தாகக் கொண்டு அதற்கு வாய்ப்பான மொழியாற் சிவன் எனவும் வழுத்துரை கூறிய நுட்பம் பெரிதுங் கடைப்பிடித்தல் வேண்டும். இனி, இருக்கு வேதத்தின்கட் சிவன் எனும் மொழி முதற்கடவுட் பெயராய் யாண்டும் வழங்கப்பட வில்லையெனக் கூறுதலும் பொருந்தாது; என்னை? இருக்கு வேதப் பத்தாம் மண்டிலத்தின் தொண்ணூற்றிரண்டாம் பதிகத்தின் ஐந்தாஞ் செய்யுளில் “ஏபி : சிவ : ஸ்வான் ஏவயாவபிர்” என்னுஞ் சொற் றொடர்க்கட் ‘சிவன்’ எனும் மொழி வந்ததாகலின் அவ்வாறு கூறுதல் அடாதென்றொழிக.

இனி, நமச்சிவாய வெனும் இம்மந்திரத்தின்கண் முதல் நிற்கும் நமஸ் என்னும் மொழி உயிரின் றொழிலாகிய வணக்கத்தை உணர்த்துதலின், அதனை முன்வைத்து, முழுமுதற் கடவுளை யுணர்த்தும் சிவனென்னும் மொழியை அதன்பின் வைத்து உரைக்கும் முறை சிறந்ததாகாமையின் நமச்சிவாய

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_25.pdf/47&oldid=1589185" இலிருந்து மீள்விக்கப்பட்டது